சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செம கடுப்பில் ரசிகர்கள்.. விஜய் என்ன மல்லையாவா? நித்யானந்தாவா? இப்படியா நடத்துவது? சரமாரி கேள்வி

கொதிப்பில் விஜய் மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    Actor Vijay's Properties should be seized - Arjun Sampath

    சென்னை: ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் கொந்தளிப்பில் உள்ளனர்.. விஜய் என்ன விஜய்மல்லையாவா? நித்யானந்தாவா? ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய் கூட்டிட்டு வந்து விசாரிக்கணுமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.. இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக காட்டமான அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர்.

    விஜய்யின் சாலிகிராம் & பனையூர் வீட்டில் 2வது நாளாக ரெய்டு நடந்தது.. இறுதியில் விஜயின் மனைவி சங்கீதாவிடம் அதிகாரிகள் வாக்கு மூலம் வாங்கி கொண்டதாக சொல்கிறார்கள்.. விஜய்யிடமும் 2 நாட்களாக பல்வேறு விஷயங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    இதையெல்லாம் பார்த்த விஜய்-யின் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஏகப்பட்ட ஆத்திரத்தில் உள்ளனர்.. அதுவும் ஒரு ரூபாய்கூட பறிமுதல் செய்யப்படவில்லை என்பதை கேட்டதும் இன்னும் எரிச்சலாகி விட்டனர்.. விஜய் நடத்தப்பட்ட விதத்திலும் மனதளவில் காயமடைந்துள்ளனர்.

    பயங்கரவாதி?

    பயங்கரவாதி?

    இது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில செயலாளர், ரவிராஜா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த அறிக்கையில், "விஜய்யிடம் வருமானவரித்துறையினர் மேற்கொண்ட விசாரணை நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது... பயங்கரவாதியை நடத்துவதுபோல் ‘மாஸ்டர்' படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விஜய்யை அழைத்து வந்து விசாரிப்பது ஏன்? அவர் நித்யானந்தாவா? இல்லை விஜய் மல்லையாவா? இதுபோன்ற விசாரணை வேறு எந்த நடிகருக்காவது நடந்துள்ளதா?

    சமூக பணி

    சமூக பணி

    விஜய் வாங்கிய பணத்துக்கு முறையாக வரி கட்டுகிறார்.. மத்திய அரசின் இந்த செயல் எங்களுக்கு அதிருப்தியை தருகிறது.. விஜய் மேற்கொண்டு வரும் சமூக பணிகள் குறித்து எல்லாருக்குமே தெரியும்.. 264 மாணவ- மாணவிகளின் படிப்பு செலவை முழுசாக ஏற்று அவர்களை படிக்க வைத்து வருகிறார்.. தான் நடித்து வரும் படங்களில் நல்ல கருத்து இருக்கும்படி பார்த்து கொள்கிறார்.

    பெண்மை

    பெண்மை

    'தமிழன்' படத்தில் தனிமனிதனுக்கு அடிப்படை சட்டம் தெரிய வேண்டும் என்றார்.. 'போக்கிரி, தெறி' படங்களில் காவல்துறையின் நேர்மையை வெளிப்படுத்தினார்.. 'துப்பாக்கி' படத்தில் தேசபாதுகாப்பை முன்னிறுத்தினார்.. 'கத்தி' படத்தில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்தார்.. 'மெர்சல்' படடத்தில் ஏழைகளுக்கு இலவச மருத்துவ உதவி கிடைக்க வலியுறுத்தினார்.. 'பிகில்' படத்தில் பெண்மையை போற்றினார்.

    மன உளைச்சல்

    மன உளைச்சல்

    அப்படிப்பட்ட கலைஞனை அவரது காரில்கூட ஏற அனுமதிக்காமல் அழைத்து வந்த செயல் விஜய் ரசிகர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.மாநிலம் முழுவதும் ரசிகர்கள் கொந்தளித்த வண்ணம் இருக்கிறார்கள். அவர்களிடம் பொறுமை காக்கும்படி கூறியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளாராம். தற்போது வழக்கமாக ஷூட்டிங்கில் கலந்து கொண்டாலும் இன்னும் ரசிகர்களின் ஆவேசத்தையும், மன உளைச்சலையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

    English summary
    vijay fans dissapointed with the way it officials treated
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X