சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒதுங்கிய ரஜினி.. களமிறங்கி அதிரடி காட்டுவாரா விஜய்?

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினிகாந்த் தற்போது அரசியலுக்கு வர போவதில்லை என்பதால் விஜய் இந்த 2021 ஆண்டில் முழு பலத்துடன் தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக இளம் எழுத்தாளர் அஸ்வின் தனது கருத்துகளை முன் வைத்துள்ளார்.

இதுகுறித்து டேக் 1 டேக் 2 டேக் 3 யூடியூப் சேனலில் இளம் எழுத்தாளர் அஷ்வின் கூறுகையில், நாளையத் தீர்ப்பில் நடிக்க ஆரம்பித்த விஜய் மாஸ்டர் வரை நடித்துவிட்டார். இந்த படம் 2021 பொங்கலுக்கு ரிலீஸாகிறது.

ரசிகர்கள் மனதிலும் சரி வசூல் ரீதியாகவும் சரி ரஜினிக்கு இணையாக விஜய் வந்துவிட்டார் என்றே சொல்லலாம். தற்போது பரவலாக ஒரு விஷயம் பேசப்படுகிறது.

சூர்யா மாதிரி விஜய் மக்களுக்கு குரல் கொடுக்கட்டும்.. பிறகு அரசியலுக்கு வரட்டும்.. சீமான் பேட்டி சூர்யா மாதிரி விஜய் மக்களுக்கு குரல் கொடுக்கட்டும்.. பிறகு அரசியலுக்கு வரட்டும்.. சீமான் பேட்டி

சட்டசபை தேர்தல்

சட்டசபை தேர்தல்

2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜய் ஒரு முழு வலிமையுடன் சக்தியுடன் போட்டியிட போகிறார் என கூறி வருகிறார்கள். இந்த தேர்தலிலேயே விஜய் களமிறங்குவதாக இருந்தார். ரஜினி அரசியலுக்கு வருவதால் அந்த திட்டத்தை விஜய் அப்படியே கைவிட்டுவிட்டார்.

விஜய்யின் அறிவிப்புகள்

விஜய்யின் அறிவிப்புகள்

விஜய்யின் மிகப் பெரிய பிளஸ் எது என பார்த்தோமேயானால் சமூகவலைதளத்தில் அவருக்கு இருக்கும் ரசிகர்கள்தான். விஜயின் பட அறிவிப்புகள், புதிய படம் ஒப்புதல் உள்ளிட்ட தகவல்களை ரசிகர்கள் விரல் நுனியில் வைத்திருப்பார்கள். இந்த ஆண்டில் அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்டது விஜயின் நெய்வேலி செல்பிதான். நாளுக்கு நாள் விஜயின் கிராஃப் ஏறிகிட்டே போகுது.

அரியலூர் அனிதா குடும்பத்திற்கு ஆறுதல்

அரியலூர் அனிதா குடும்பத்திற்கு ஆறுதல்

விஜய் பல இளம் இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். படத்திற்காக சில அரசியல் கருத்துகளை விஜய் பேசினாலும் கடைசியில் அது அவருடைய கருத்தாகவே ஆகிவிட்டது. இத்துடன் சமூக நலன் கருதி பல விஷயங்களை அவர் அமைதியாக செய்து கொண்டிருக்கிறார். உதாரணமாக நீட்டினால் இறந்த அரியலூர் அனிதாவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

அது போல் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களை நேரடியாக போய் பார்த்தார். அதுவும் எப்படி ரசிகருடைய இரு சக்கர வாகனத்தில் அவரை பின்னால் உட்கார வைத்து விஜய்யே வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஒரு வீடியோவை தனது ட்விட்டரில் போட்டார் விஜய்.

ஆதரவு

ஆதரவு

அது மட்டுமல்லாமல் அந்த போராட்டக் களத்திற்கே நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்தார். இதுவரை 63 திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார் விஜய். ஆனால் இந்த திரைப்படங்களுக்கே விஜய் இந்த அளவில் ரீச்சாகியுள்ளார். மாஸான படங்களை மட்டுமே செய்ய வேண்டும் என்று எண்ணாமல் மக்களுக்கான கருத்துகளையும் சொல்ல வேண்டும் என நினைத்தே மெர்சல், சர்கார், கத்தி போன்ற படங்களை செய்துள்ளார்.

விஜய் நிச்சயம்

விஜய் நிச்சயம்

அப்படியிருக்கும் போது மாஸ்டர் படத்தில் அவர் எந்த மாதிரியான கருத்துகளை முன் வைக்க போகிறார் என தெரியவில்லை. 2026ஆம் ஆண்டு விஜய் அரசியலுக்கு வந்தால் அந்த அரசியல் நிலைப்பாடு எப்படியிருக்கும்? தற்போது இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு விஜய் நிச்சயம் சிம்மசொப்பனமாக இருப்பார்.

அஸ்வின்

அஸ்வின்

தலைவன் ஒருவன் தனக்கு பின்னால் வருபவனை தொண்டனாக்குவான் என நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிறந்த தலைவன் தனக்கு பின்னால் வருகிற ஒவ்வொருவனையும் தலைவனாக்குவான் என்பதற்கு விஜய் ஒரு சிறந்த உதாரணம் என நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள் என தனது கருத்துகளை அஸ்வின் முன் வைத்திருக்கிறார். இந்த நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் என்பது இல்லை என்றாகிவிட்டாது, எனவே விஜய் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் களமிறங்கி அதிரடி காட்டுவாரா என்பதை பார்ப்போம்.

English summary
Young Writer Ashwin says that Actor Vijay may enter into politics in 2021, as Rajinikanth is away.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X