சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அப்பா சென்டிமென்ட்.. மீண்டும் உண்டான இணக்கம்.. திமுகவுடன் நெருங்கும் விஜய்.. என்ன செய்ய போகிறார்?

கடந்த சில நாட்களாக நடிகர் விஜய்க்கும் திமுக கட்சிக்கும் இடையில் நெருக்கம் அதிகமாகிக் கொண்டே வருவதாக விஜய் மக்கள் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த சில நாட்களாக நடிகர் விஜய்க்கும் திமுக கட்சிக்கும் இடையில் நெருக்கம் அதிகமாகிக் கொண்டே வருவதாக விஜய் மக்கள் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கிறது. விரைவில் விஜய் அரசியல் தொடர்பான முக்கிய முடிவை எடுக்க கூட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

நடிகர் விஜய் தற்போது தமிழக அரசியலில் லைம் லைட்டில் இருக்கிறார். மாஸ்டர் படத்தின் அப்டேட், இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது எல்லாம் பெரிய வரவேற்பை பெற்றது. அதே சமயம் இன்னொரு பக்கம் விஜய் வீட்டில் நடந்த ரெய்டு பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

விஜய் வீட்டில் நடந்த இந்த ரெய்டின் முடிவில் ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை. விஜய் முறையாக வரி செலுத்தி இருக்கிறார் என்று இந்த ரெய்டு முடிவில் தெரிவிக்கப்பட்டது. இந்த ரெய்டில் இருந்தே விஜயின் அரசியல் வருகை அதிக எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி உள்ளது.

எப்போது வருவார்

எப்போது வருவார்

நடிகர் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்று அவரின் ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கிவிட்டார்கள். தலைவா இதுதான் சரியான நேரம் உடனே வாங்க, பெரிய அளவில் சாதிக்கலாம் என்று அவரின் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் விஜய் இன்னும் இதுகுறித்து தெளிவாக முடிவு எதுவும் எடுக்கவில்லை. கடந்த சில நாட்களாக நடிகர் விஜய்க்கும் திமுக கட்சிக்கும் இடையில் நெருக்கம் அதிகமாகிக் கொண்டே வருவதாக விஜய் மக்கள் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கிறது. வெளிப்படையாக இந்த நெருக்கம் தெரிய தொடங்கி உள்ளது.

அப்பா திமுக

அப்பா திமுக

திமுகவிற்கும் விஜய் குடும்பத்திற்குமான நெருக்கம் என்பது பல வருடங்களாக உள்ளது. விஜயின் அப்பா எஸ். ஏ சந்திரசேகர் தீவிரமான திமுக தொண்டர். திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதிக்கு சந்திரசேகர் மிக நெருக்கம். திமுகவை தொடக்கத்தில் இருந்து இவர் தீவிரமாக ஆதரித்து வந்தார். இதை தன்னுடைய படங்களில் பலமுறை இவர் வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார். விஜயும் தொடக்க காலத்தில் திமுகவிற்கு நெருக்கமாக இருந்தார்.

கொஞ்சம் விலகினார்

கொஞ்சம் விலகினார்

ஆனால் காவலன் படம் வெளியான சமயத்தில் திமுகவில் இருந்த மு.க அழகிரிக்கும், விஜய் தரப்பிற்கும் பிரச்சனை வந்தது. அப்போது வெளியான விஜய் படங்களை மதுரையில் வெளியிடுவதில் பெரிய பிரச்சனை இருந்தது. அதேபோல் 2ஜி குறித்து விஜய் கத்தி படத்தில் பேசிய வசனமும் பெரிய சர்ச்சை ஆனது. இதனால் திமுகவிற்கும் விஜய்க்கும் இடையில் கொஞ்சம் விரிசல் ஏற்பட்டது.

மீண்டும் நெருக்கம்

மீண்டும் நெருக்கம்

ஆனால் போக போக மீண்டும் விஜய் திமுகவிற்கு நெருக்கம் ஆனார். முக்கியமாக மெர்சல் படத்தின் போது பாஜகவும், அதிமுகவும் சேர்ந்து விஜயை எதிர்த்தது. அப்போது திமுகதான் விஜய்க்கு கை கொடுத்தது. அதேபோல் சர்க்கார் படத்தின் பிரச்சனையின் போதும் விஜய்க்கு அதிமுக பெரிய அளவில் நெருக்கடி கொடுத்தது. அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் வெளிப்படையாக விஜய்க்கு ஆதரவாக பேசினார்.

தொடர் ஆதரவு

தொடர் ஆதரவு

அதன்பின் வரிசையாக விஜய்க்கு பிரச்சனை ஏற்பட்ட போதெல்லாம் திமுக ஆதரவு தெரிவித்தது. விஜயை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு இருந்தார். இதை திமுக கடுமையான முறையில் விமர்சனம் செய்தது. விஜயை பாஜக விமர்சனம் செய்த போதெல்லாம் முதல் ஆளாக வந்த விஜய்க்கு திமுகவினர் சப்போர்ட் செய்தனர். இதனால் இவர்கள் நெருக்கம் ஆனார்கள்.

உதயநிதி நட்பு

உதயநிதி நட்பு

அதேபோல் இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலின் விஜய் இடையே நட்பு ஏற்பட்டது. பல்வேறு சினிமா நிகழ்வுகளில் இவர்கள் கலந்து கொண்டார்கள். உதயநிதி பல்வேறு முறை விஜயையே சந்தித்து பேசி இருக்கிறார்.இந்த சந்திப்பில் இவர்கள் சினிமா பற்றி மட்டும் பேசி இருப்பார்கள் என்று கூற முடியாது. கண்டிப்பாக அரசியல் குறித்தும் இவர்கள் பேசி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

ஈரோடு எதிர்ப்பு

ஈரோடு எதிர்ப்பு

அதேபோல் நடிகர் விஜய் வீட்டில் ரெய்டு நடந்த போது அதை திமுகதான் கடுமையாக எதிர்த்தது. ஸ்டாலின் இதற்கு எதிராக பேட்டி அளித்தார். திமுக எம்பி தயாநிதி மாறன் இதை வெளிப்படையாக லோக்சபாவில் பேசினார். இது விஜய்க்கு அரசியல் ரீதியாக பெரிய சப்போர்ட்டாக மாறியது. நீங்கள் தனியாக இல்லை, திமுக உங்களுக்கு சப்போர்ட் செய்யும் என்று சொல்லாமல் திமுக செயலில் காட்டியது குறிப்பிடத்தக்கது.

ரஜினியை சமாளிப்பார்

ரஜினியை சமாளிப்பார்

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை சமாளிக்க திமுக விஜயை பயன்படுத்தும் என்று கூறுகிறார்கள். நடிகர் ரஜினிக்கு சமமான விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். முக்கியமாக விஜய்க்கு இளைஞர்கள் பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இவர்களை கவர திமுக விஜயை தங்கள் பக்கம் இழுக்க வாய்ப்புள்ளது. ரஜினி போல தங்களுக்கு ஒரு ஸ்டார் வேல்யூ இதனால் கிடைக்கும் என்று திமுக நம்புகிறது.

ஒரே கொள்கை

ஒரே கொள்கை

கொள்கை ரீதியாகவும் விஜய் தமிழர், திராவிடம், பாஜக எதிர்ப்பு என்று பேசி வருகிறார். இதனால் திமுகவிற்கு விஜய் நல்ல பொருத்தமாக இருப்பார். ஆகவே விஜயின் அரசியல் வருகை அதிக எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி உள்ளது. பெரும்பாலும் 2021 சட்டசபை தேர்தலில் விஜய் திமுகவிற்கு பிரச்சாரம் செய்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. குறைந்தபட்சம் விஜய் திமுகவிற்கு ஆதரவாக ''வாய்ஸ்'' கொடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

English summary
Actor Vijay may support DMK in the Future for both of their's political plans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X