"பச்சை சிக்னல்" தந்த விஜய்?..மீண்டும் பட்டைய கிளப்பி வரும் மக்கள் இயக்கம்.. அப்ப மநீம, நாம் தமிழர்?
சென்னை: நடக்க போகும் தேர்தலில் களமிறங்குமாறு, தன்னுடைய மக்கள் இயக்கத்தினருக்கு, நடிகர் விஜய் அனுமதி தந்துவிட்டதாக, உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று கசிந்து வருகிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தலைப்போலவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் களமிறங்குகிறார்கள் என்பதால் ஊராக உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றியை இந்த தேர்தலிலும் பெறுவார்கள் என்று விஜய் மக்கள் இயக்கத்தினர் மீது பார்வை குவிந்திருக்கிறது.
4 டோஸ் போட்டும் யூஸ் இல்லையாம்.. ஓமிக்ரானை தடுக்க முடியாமல் திணறிய வேக்சின்கள்.. இஸ்ரேல் பரபர ஆய்வு!
விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த சில வருடங்களாகவே வலியுறுத்தி வருகின்றனர்... இதனிடையே, அப்பாவுடன் ஏற்பட்ட மோதலில் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும், விஜய் தலைமையிலான விஜய் மக்கள் இயக்கம் தொடர்ந்து செயல்பட்டே வருகிறது.

ரசிகர்கள்
அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்களின் விடாத கோரிக்கைக்கு, பொறுமை காக்குமாறு விஜய்யும் சொல்லி வருகிறார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமது ரசிகர்கள் போட்டியிட அனுமதி வழங்கியிருந்தார் விஜய்.. அத்துடன் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியையும் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியிருந்தார்.. இதனால் உற்சாகமான ரசிகர்களும், முழுவீச்சில் தேர்தல் பணியை மேற்கொண்டனர்.

அபார வெற்றி
மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டனர்... 115 வார்டு உறுப்பினர்களுக்கான இடங்களையும் பிடித்தனர். இந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றியிருந்த நிலையில், வார்டு உறுப்பினர் பதவியில் 115 இடங்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வெற்றிபெற்றது பலரின் கவனத்தையும் பெற்றதுடன், அரசியலில் பேசுபொருளாகவும் மாறியது. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் 169 பேர் போட்டியிட்டனர். 129 பேர் வெற்றி பெற்றனர்... 13 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தனர்.

விஜயகாந்த்
கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர், விஜயகாந்த்தின் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளே பெரிய பின்னடைவை சந்தித்திருந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றிவாகை சூடியிருந்தது விஜய் ரசிகர்கள் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.. இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், அதற்கான தேதியும் இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என்று நம்பப்படுகிறது..

அனுமதி
அதேசமயம், இந்த முறையும் விஜய் மக்கள் இயக்கத்தினர் களம் காணுவார்களோ என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், தேர்தலில் களமிறங்க நடிகர் விஜய்யின் அனுமதியை விஜய் மக்கள் இயக்கத்தினர் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது.. மற்ற கட்சிகளை போல் விஜய் மக்கள் இயக்கத்தினர் களம் இறங்க அனுமதி கேட்டதாகவும், அதற்கு விஜய் ஓகே சொல்லி இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன...

சீமான்
அதிமுக -திமுகவுக்கு அடுத்தபடியாக பெரிய கட்சியாக உருவாகி விடுமோ என்கிற சலசலப்பை ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கத்தினர் உருவாக்கி இருந்த நிலையில், இப்போது மேலும் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துள்ளது. அதேசமயம், சீமான், விஜயகாந்த், கமல் போன்றோர் தங்கள் கட்சியின் செல்வாக்கையும், வாக்கு சதவீதத்தை உயர்த்தவும் என்ன மாதிரியான முன்னெடுப்பை எடுக்க போகிறார்கள் என்பதும் எதிர்பார்ப்பாக கிளம்பி இருக்கிறது..!