சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஜய் அரசியல்... கையோடு அப்படி ஒன்று நடந்தால்.. 2021 தேர்தலில் தலைகீழ் மாற்றம் வரலாம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    மாஸ்டர் படப்பிடிப்பில் மாஸ் காட்டிய விஜய் | FILMIBEAT TAMIL

    சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்குமே வாக்கு சதவீதம் குறையும் வாய்ப்பு உள்ளது. எப்படி கமல் ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை வாக்கு வங்கியாக கைப்பற்றினாரோ அதேபோல் விஜய்யும் குறிப்பிட்ட அளவு வாக்குகளை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. ஆனால் இதன் விளைவுகள் என்றால்.. அவர் எடுத்து செல்லப்போகும் அரசியல் பாதையே தீர்மானிக்கும்.

    20k கிட்ஸ் என்று அழைக்கப்படும் 2000த்திற்கு பிறகு பிறந்த பலருக்கும் பிடித்த ஹீரோ யார் என்று கேட்டால் கையை சட்டென நீட்டி சொல்லிவிடுவார்கள் அது விஜய் அல்லது அஜித் என்று... ஏன் 90களுக்குபிறகு பிறந்த பலருக்குமே விஜய் அல்லது அஜித் தான் பிடித்த நடிகர் .

    இவர்களில் விஜய் அரசியலுக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் கட்சிகளே அதிகம் கணித்து வைத்திருக்கின்றன.

    உடனே வர முடியாது.. கூடுதல் அவகாசம் வேண்டும்.. வருமான வரித்துறை சம்மனுக்கு விஜய் அதிரடி பதில்! உடனே வர முடியாது.. கூடுதல் அவகாசம் வேண்டும்.. வருமான வரித்துறை சம்மனுக்கு விஜய் அதிரடி பதில்!

    விஜய் சொல்லவில்லை

    விஜய் சொல்லவில்லை

    ஒருவேளை விஜய் 2021 அரசியலில் இறக்குவாரா என்ற அச்சமும் சில அரசியல் இயக்கங்களுக்கு உண்டு. வருமான வரி சோதனை.. நெருக்கடி போன்ற காரணங்களால் இப்படியாக பொதுவெளிகளில் சொல்லப்படுகிறது. ஆனால் அரசியல் பற்றி வெளிப்படையாக விஜய் அறிவித்தது இல்லை. அதேநேரம் விஜய் அரசியலுக்கு வர மாட்டேன் என்று எந்த இடத்திலும் சொன்னது இல்லை.

    விஜய் அரசியல் பேசுவார்

    விஜய் அரசியல் பேசுவார்

    நடிகர் விஜய் எப்போது மேடை ஏறினாலும் அரசியல் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறார். சில நேரங்களில் ஆளும் அதிமுகவை தாக்கும் அளவுக்கு குரல் கொடுக்கிறார். அண்மையில் சுபஸ்ரீ பிரச்சனைக்கு விஜய் கொடுத்த குரல் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    புதிய ஆளுமை

    புதிய ஆளுமை

    2021 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை முற்றிலும் வித்தியாசமான தேர்தலாக இருக்க போகிறது. ஏனெனில் இதில் வெற்றி பெறுபவர்களே புதிய ஆளுமையாக உருவெடுப்பார்கள். ஜெயலலிதா , கருணாநிதி இல்லாமல் நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அதிமுகவிலும் சரி, திமுகவிலும் சரி பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

    அதிமுக-திமுக

    அதிமுக-திமுக

    இந்த வெற்றிடத்தை நிரப்ப ரஜினி அரசியலுக்கு வர விரும்புவதை வெளிப்படையாகவே அறிவித்தார். அவர் வரப்போவதும் உறுதியாகி உள்ளது. நிச்சயம் ரஜினி திமுகவுடன் இணைந்து செயல்படுவாரா என்பது அவருடைய அண்மைக்கால பேச்சுக்களை பார்த்தால் வாய்ப்பில்லை. அதேநேரம் அதிமுக மற்றும் பாஜகவுக்கு சாதமாக ரஜினி செல்ல வாய்ப்பு உள்ளதாக கணிப்புகள் சொல்கின்றன.

    நடக்குமா அப்படி

    நடக்குமா அப்படி

    இந்த சூழ்நிலையில் விஜய் அரசியலுக்கு வந்தால், அது மேலும் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும். தனித்து நின்று செயல்பட்டு விஜயகாந்த்தை போல் கட்சி ஆரம்பித்தால் 2006ல் ஏற்பட்ட பாதிப்பை போல் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அதேநேரம் அதிமுகவுடன் ரஜினி, திமுகவுடன் விஜய் என்ற ரீதியில் மாறினால் திமுகவுக்கு பெரும் சாதகமாக மாறிடலாம். ஆனால் அப்படி நடப்பதற்கு வாய்ப்பு என்பது மிகக்குறைவு.

    அரசியல்வாதி ரஜினி

    அரசியல்வாதி ரஜினி

    இப்போதைய அரசியல் சூழலில் விஜய் ,ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வந்தால் அது 2021 தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் விஜய் அரசியலுக்கு வருவாரா, வரவைக்கப்படுவாரா என்பதை இனி வரும் காலங்கள் தீர்மானிக்க போகிறது. 2021 தேர்தல் வித்தியாசமான மற்றும் விறுவிறுப்பான களமாக தமிழகத்தில் இருக்க போகிறது என்பது மட்டும் உண்மை. ரஜினி, கமல் , விஜய் என ஒவ்வொருவராக தமிழக அரசியலுக்கு வந்தாலும், அவர்கள் அரசியல்வாதியாக செயல்பட போகும்விதமாக வாக்குகளை தருமே தவிர மக்களிடம் அவர்களுக்கு உள்ள அபிமானம் ஒட்டை தராது என்பதே நிதர்சமான உண்மை.

    English summary
    vijay may enter in tamil nadu politics. how vijay politics affect dmk and aiadmk in tamil nadu assembly election 2021
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X