சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முடிவை கைவிட்ட எஸ்ஏ சந்திசேகர்.. இடையில் என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டாம் என விஜய்யின் தந்தை ஏஎஸ் சந்திரசேகர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இதன் மூலம் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முடிவை அவர் கைவிட்டுவிட்டதாக தெரிகிறது

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்யுமாறு நவம்பர் 5ம் தேதி தேர்தல் ஆணையத்தை அணுகினார்.

,இந்த விவகாரம் கசிந்த நிலையில் விஜய் தான் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாகவும், அதனால் தான் அவரது தந்தை தேர்தல் ஆணையத்தில் கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார் என்றும் ஊடகங்களில் செய்திகள் காட்டூத்தீயாக பரவ தொடங்கின.

விஜய் கட்சி ஆரம்பிக்கவில்லை

விஜய் கட்சி ஆரம்பிக்கவில்லை

ஆனால் செய்திகள் பரவ தொடங்கிய சில நிமிடங்களிலேய விஜய்யின் பிஆர்ஓ ரியாஸ் அகமது, விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார். அதேநேரம் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இது தான் ஆரம்பித்துள்ள கட்சி என்றும், இதற்கும் விஜய்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறினார்.

சம்பந்தம் இல்லை

சம்பந்தம் இல்லை

எஸ்ஏ சந்திரசேகரின் பேட்டியை கண்டுஅதிர்ச்சிஅடைந்த விஜய், விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், தனக்கும் தன் தந்தையின் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் பெயரையோ, அமைப்பையோ அல்லது என் புகைப்படத்தையோ பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். என் தந்தை ஆரம்பித்துள்ளார் என்பதற்காக அவரது இயக்கத்தில் எனது ரசிகர்கள் சேர வேண்டாம்" இவ்வாறு விஜய் குறிப்பிட்டிருந்தார்.

பத்மநாபன் ராஜினாமா

பத்மநாபன் ராஜினாமா

இதற்கிடையே அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தில் பொருளாளர் பொறுப்பில் இருந்து விஜய்யின் தாயார் ஷோபா உடனடியாக ராஜினாமா செய்தார். அரசியல் கட்சி தொடங்க வேண்டாம் என விஜய் எவ்வளவு சொல்லியும் என் கணவர் எஸ்ஏ சந்திசேகர் கேட்கவில்லை என்று ஷோபா குற்றம்சாட்டினார். இதனிடையே விஜய் மக்கள் இயக்க கட்சியின் மாநில தலைவர் பத்மநாபனும் ராஜினாமா செய்தார்.

அரசியல் கட்சி முடிவு

அரசியல் கட்சி முடிவு

இதையடுத்து விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இதன் மூலம் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முடிவை அவர் கைவிட்டுவிட்டதாக தெரிகிறது இனி அரசியல் கட்சி என்ற பேச்சை விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் எடுக்கமாட்டார் என கூறப்படுகிறது. விஜய் எப்போது கட்சி ஆரம்பிப்பார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் அதிக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

English summary
Vijay's father SA Chandrasekhar has written a letter to the Election Commission asking it not to register the akila india makkal iyyakkam as a political party. With this he seems to have abandoned the decision to start a political party
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X