சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்!

மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு தேவை என்பதையே நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு தேவை என்பதையே நடிகர் விஜய் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடந்தது.

இதில் நடிகர் விஜய் பேசிய விஷயங்கள் பெரிய அளவில் வைரலானது. இவரின் கருத்துக்கள் அரசியல் அரங்கத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அன்று எடப்பாடி.. இன்று எடியூரப்பா... ஆட்சியை தக்க வைக்க கை கொடுக்குமா இடைத்தேர்தல்கள்?அன்று எடப்பாடி.. இன்று எடியூரப்பா... ஆட்சியை தக்க வைக்க கை கொடுக்குமா இடைத்தேர்தல்கள்?

என்ன பேச்சு

என்ன பேச்சு

விஜய் தனது பேச்சில் அரசியலில் புகுந்து நிறைய விளையாடுங்கள், ஆனால் விளையாட்டில் அரசியலை கொண்டு வராதீர்கள். யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்க வேண்டும். அப்படி வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும்.

யார் எல்லாம்

யார் எல்லாம்

என்னுடைய முதலாளி ரசிகர்கள் தான். உங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். நாம் விளையாடும் வாழ்க்கை கூட ஒரு கால்பந்து விளையாட்டுதான். நம்மை வளர விடாமல் தடுக்க சிலர் முயற்சி செய்வார்கள். நமக்கு எதிராக சிலர் குழி பறிக்க முயற்சி செய்வார்கள்.என்று குறிப்பிட்டார்.

சீமான் கருத்து

சீமான் கருத்து

இந்த நிலையில் இது தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்துள்ளார். சீமான் தனது பேச்சில், மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு தேவை என்பதையே நடிகர் விஜய் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியது சரிதான். உண்மையான கருத்துக்களை அவர் கூறியுள்ளார்.சரியான தலைவர்களை தேர்வு செய்யத் தவறியதால் தவறு நடந்து கொண்டு இருக்கிறது.

என்ன தலைவர்கள்

என்ன தலைவர்கள்

மக்கள் நல்ல தலைவர்களை தேர்வு செய்ய தவறி விட்டார்கள். நமக்கு அரசியல் விழிப்புணர்வு குறைந்துவிட்டது. மக்களின் இந்த நிலைக்கு மக்கள் மட்டும் காரணம் கிடையாது. மக்களை இப்படி ஆக்கிய அரசியல்வாதிகளும் இதற்கு காரணம்தான்.

சட்டசபை தேர்தல்

சட்டசபை தேர்தல்

தமிழகத்தில் 2 சட்டசபை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். 25ம் தேதி நாங்கள் வேட்பாளர்களை அறிவிப்போம். அதன்பின் தேர்தலில் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்வோம். ஆனால் பிரச்சாரம் செய்ய குறைந்த காலமே இருக்கிறது என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Actor Vijay said correct things about politics says Seeman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X