சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்களுக்கு தேவையானதையே சட்டமாக்க வேண்டும்.. அவர்களை அடைக்க கூடாது.. சிஏஏவை விமர்சித்து விஜய் அதிரடி!

மக்களுக்கு எது தேவையோ அதை தான் சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது, என்று சிஏஏவை விமர்சனம் செய்து நடிகர் விஜய் பேசியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மக்களுக்கு எது தேவையோ அதை தான் சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது, என்று சிஏஏவை விமர்சனம் செய்து நடிகர் விஜய் பேசியுள்ளார்.

Recommended Video

    LIVE Master Audio Launch Exclusive | Emotional Message | Vijay | Vijay Sethupathi

    மாஸ்டர் படம் தற்போது கோலிவுட்டின் மிகப்பெரிய படமாக உருவாகி வருகிறது. மல்டி ஸ்டார் படமாக விஜய் நடிக்கும் இந்த படம் உருவாகி வருகிறது

    மாநகரம் எடுத்து ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு வில்லனாக நடித்து உள்ளார். நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் சிங்கிள் பாடலுக்கு ஒரு குட்டி கதை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பாடல் இன்று வெளியானது. இதன் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடந்தது.

    விஜய் என்ன சொன்னார்

    விஜய் என்ன சொன்னார்

    இந்த நிலையில் மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் தனது ரசிகர்களுக்கு மன்னிப்பு கேட்டார். அவர் தனது பேச்சில், கடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு சில விஷயங்கள் நடந்தது. அதனால் இந்த முறை ரசிகர்கள் இல்லாமல் ஆடியோ வெளியீட்டு விழா நடந்து இருக்கிறது. எனக்கும் இது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

    மன்னிப்பு கேட்டார்

    மன்னிப்பு கேட்டார்

    அதனால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் எப்போதும் ஆடியோ லாஞ்சில் குட்டி ஸ்டோரி சொல்வேன். இந்த முறை ஆடியோ லாஞ்சில் குட்டி ஸ்டோரி பாடலும் வெளியாகி உள்ளது. எப்போது நண்பர் அஜித் மாதிரி கோட் ஷூட் போட்டு வந்திருக்கிறேன். நான் எப்படி அழகா இருக்கேனா?. நான் சரியாக டிரெஸ் போடுவதில்லை என்ற புகாரை இப்போது சரி செய்துள்ளேன்.

    வாழ்க்கை எப்படி

    வாழ்க்கை எப்படி

    வாழ்க்கை நதி மாதிரிநம்மள வணங்குவாங்க, வரவேற்பாங்க , கல்லு எரிவாங்க. ஆனா கடமையை செஞ்சுட்டு போயிட்டே இருக்கனும். நம்மை எதிர்ப்பவர்களை சிரிப்போடு எதிர்கொள்ள வேண்டும். அவர்களை நம் சிரிப்பால் சாகடிக்க வேண்டும்

    சிஏஏ சட்டம்

    சிஏஏ சட்டம்

    மக்களுக்கு எது தேவையோ அதை தான் சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது. நம்மை புடிக்காதவங்க நம்ம மேல கல் எறிவாங்க.. சிரிப்பாலயே அவங்கள கொல்லணும், என்றார். இந்த நிலையில் தொகுப்பாளர், 20 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த விஜயிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டுமென்றால் என்ன கேட்பீர்கள்?

    ரெய்டு

    ரெய்டு

    அதற்கு விஜய், என் அப்பா மாதிரி சந்தோசமாக வாழனும் என்று நினைப்பேன். ரெய்டு எல்லாம் இல்லாத அந்த அமைதியான வாழ்க்கை வேணும்னு கேட்பேன்.உண்மையா இருக்கனும்னா சில நேரத்தில் ஊமையாகவும் இருக்கனும்.,என்று குறிப்பிட்டார். அவரின் இந்த அரசியல் பேச்சு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    English summary
    Actor Vijay speaks against CAA in master Audio launch.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X