சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விஜய பிரபாகரனை கொ.ப.செ. ஆக்கினால் என்ன.. தீவிர சிந்தனையில் தேமுதிக.. பயன் தருமா?

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு புதிய பதவி தரப்படும் என தெரிகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    Video : 'My dads helth is stable' says vijayaprabhakaran

    சென்னை: சுத்தம்.. விஜயபிரபாகரனை தேமுதிகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது!

    கரைந்து காணாமல் போய் கொண்டிருக்கும் முக்கிய கட்சிகளில் ஒன்று தேமுதிக... விஜயகாந்த் என்ற நபரின் மனசை பார்த்து இக்கட்சியில் மக்கள் இணைய ஆரம்பித்தனர்.

    பாடுபட்டு உழைத்து, திரட்டி வைத்த ரசிகர்களை எல்லாம் தொண்டர்களாக்கி தன்வசப்படுத்தினார் விஜயகாந்த். சுத்தமான உள்ளம், ஈகை எண்ணம், அயராது உழைப்பு, மக்களின் மேல் உள்ள அக்கறை.. இப்படி பல விஷயங்களில் தேமுதிகவை 2-ம் இட அந்தத்ஸதுக்கு உயர்த்தினார் விஜயகாந்த்!

    செவ்வாய்க்கு போன அதே டெஸ்லா கார்.. எலோன் மஸ்க் நிறுவனத்திற்கு சென்ற முதல்வர் பழனிச்சாமி.. அட செமசெவ்வாய்க்கு போன அதே டெஸ்லா கார்.. எலோன் மஸ்க் நிறுவனத்திற்கு சென்ற முதல்வர் பழனிச்சாமி.. அட செம

    தேமுதிக

    தேமுதிக

    ஆனால் அவருக்கு எப்போது உடம்புக்கு முடியாமல் போனதோ, அப்போதே கட்சியும் படுத்து விட்டது. அவருக்கு அடுத்து யாராலுமே தேமுதிகவை தூக்கி நிறுத்த முடியவில்லை. இருக்கும் பொறுப்பாளர்களும் மேடைகளில் பேசி, கட்சிக்கான அங்கீகாரத்தை இழந்து விடுவதாக அக்கட்சி தொண்டர்களே புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பெரிய மைனஸ்

    பெரிய மைனஸ்

    சிலதினங்களுக்கு முன்பு இளைஞர் அணி பொறுப்பு விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனுக்கு தரப்படலாம் என்று பேசப்பட்டது. ஆனால் இவரது மேடைப்பேச்சு மக்களுக்கும், பிற கட்சி தலைவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துவிட்டது பெரிய மைனஸ். பெரியவர்களை மட்டு மரியாதை இல்லாமல் இவர் பேசிய பேச்சை, விஜயகாந்த்துக்காக அனைவருமே பொறுத்து கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

    கொபசெ

    கொபசெ

    இப்போது, விஜயபிரபாகரனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி தரப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. வருகிற 15-ம் தேதி திருப்பூரில் தேமுதிக மாநில மாநாடு நடக்க உள்ளது. இப்படி மாநாடு நடந்து ரொம்ப நாள் ஆகிறது.. விஜயகாந்துக்கு உடம்பு சரியில்லாமல் போனதால் இந்த மாநாட்டை நடத்துவதில் உற்சாகம் காட்டப்படவில்லை. ஆனால் இருக்கும் தொண்டர்களும் காணாமல் போய் கொண்டிருப்பதால், அதை தடுக்கும் நோக்கத்துடன், இந்த மாநாடு நடத்தப்படுவதாக தெரிகிறது.

    பிரச்சார பீரங்கி

    பிரச்சார பீரங்கி

    கட்சிக்கான அங்கீரத்தை இழக்கும் அளவுக்கு தேர்தல் தோல்வி, வந்துவிட்டதால், அதை சீரமைக்கும், அல்லது பலப்படுத்தும் பணி தேமுதிகவுக்கு நிறையவே இருக்கிறது என்பது உண்மைதான். அதனால்தான் விஜயபிரபாகரனை கட்சியின் பிரச்சார பீரங்கியாக பயன்படுத்த தலைமை யோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்த மாநாட்டில் அந்த பொறுப்பு தரப்படலாம் என்றும் தெரிகிறது.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    ஒருவகையில் விஜயபிரபாகரனுக்கு இந்த பொறுப்பு தரப்படுவது சரியென்றும் தோன்றுகிறது. விஜயபிரபாகரன் ஒரு துடிப்பு மிக்க இளைஞர்.. சோஷியல் மீடியாவில் இளைஞர்களை இணைத்து, கட்சியை வலுப்படுத்த கூடிய அளவுக்கு வலிமை மிக்கவராக இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அது மட்டுமில்லை.. இப்போதைக்கு கட்சியில் ஆக்டிவ்-வாக இருப்பவர் இவர் மட்டும்தான்!

    மக்கள்

    மக்கள்

    அந்த வகையில் இளைஞர் அணி பொறுப்பு அல்லது கொபசெ பொறுப்பு.. இவற்றில் எதை தந்தாலும் அதனை விஜயபிரபாகரன் பயன்படுத்தி கொள்வது மிக மிக அவசியமாகிறது. மக்களோடு மக்களாக தேமுதிக சேருவதே கிடையாது, எந்த மக்கள் போராட்டத்தையும் முன்னெடுப்பதும் கிடையாது என்ற இவ்வளவு கால பேச்சையெல்லாம் விஜயபிரபாகரன் உடைத்தெறிய வேண்டும்.

    நாவடக்கம்

    நாவடக்கம்

    அதற்கு அவையடக்கம், நாவடக்கத்துடன், மக்களுடன் கலந்து, இணைந்து, செயல்பட்டால் மட்டுமே அவருக்கு நம்பி வழங்கப்படும் பதவிக்கு பெருமை.. இல்லையென்றால் அவ்வளவும் விஜயகாந்த் என்ற நல்ல ஆத்மாவை சிறுமைப்படுத்தி விடும் என்பதே யதார்த்தம்!

    English summary
    Sources say that, Vijaya Prabhakaran may appoint as DMDK Proppaganda Secretary in their Tirupur Party Conference
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X