சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனக்கு 27 வயசாகுது... உங்க மகனாக என்னை நினைச்சுக்குங்க.. சுபஸ்ரீ பெற்றோரை நெகிழ வைத்த விஜய பிரபாகரன்

சுபஸ்ரீயின் பெற்றோருக்கு விஜய பிரபாகரன் நேரில் ஆறுதல் தெரிவித்தார்

Google Oneindia Tamil News

Recommended Video

    சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்த விஜய பிரபாகரன்

    சென்னை: "எனக்கு 27 வயசாகுது... உங்க மகனாக என்னை நினைச்சுக்குங்க. என்ன உதவி வேண்டுமோ கேளுங்க. எந்த நேரத்திலும் வந்து செய்து தருவேன்" என்று விஜயபிரபாகரன் சுபஸ்ரீ பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் பேனர் சரிந்து விழுந்ததில் உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து வருத்தத்தையும், ஆறுதலையும் சொல்லி வருகின்றனர்.

    Vijaya Prabhakaran met Subasri parents

    அதன்படி, தேமுதிகவின் விஜயபிரபாகரனும் சுபஸ்ரீ வீட்டுக்கு சென்றிருந்தார். சுபஸ்ரீயின் அம்மா கீதா, அப்பா ரவிக்கு தன் ஆறுதலை தெரிவித்து, உணர்ச்சி பொங்க பேசினார்.

    "நான் இங்கே வந்ததில் எந்த அரசியலும் இல்லை. சுபஸ்ரீ இழப்பு என்னை ரொம்பவே பாதித்தது எனக்கு 27 வயசாகுது. என்னை உங்க மகனாக நினைச்சுக்குங்க. என்ன உதவி வேண்டுமோ கேளுங்க. எந்த நேரத்திலும் செய்து தருவேன் என்றார்.

    இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒரு உயிரை இழந்து சுபஸ்ரீயின் குடும்பம் வேதனையில் உள்ளது. இந்த விபத்துக்கு காரணமாக யார் இருந்தாலும் சரி, அவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.,

    3 நாட்களுக்கு முன்பு, ஆவடி கூட்டத்தில் பிரேமலதா பேசும்போது, "சுபஸ்ரீ உயிரிழப்பு எதிர்பாராத நிகழ்வு ஆகும். சுபஸ்ரீ மீது பேனர் விழுந்தது, லாரி வந்தது விதி. அதிமுக பேனர் என்பதால் எதிர்க்கட்சி தலைவர் இதனை பெரிதுபடுத்தி உள்ளார்" என்றார். அதாவது, சுபஸ்ரீ இறந்ததை விதி என்று பிரேமலதா பேசவும் இது சர்ச்சையானது.

    இந்நிலையில், அவரது மகனோ, பேனர் வைத்தது யாராக இருந்தாலும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்.. இப்படி ஒரே வீட்டுக்குள் இருப்பவர்கள்.. ஒரே கட்சியை சேர்ந்தவர்களின்... இருவேறு கருத்தை கருத்தை நாம் எப்படி பார்ப்பது?

    English summary
    DMDK Vijaya Prabhakaran met Subasri Parents in Chennai and consoled them
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X