சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால்தான் சர்ச்சையானது சுபஸ்ரீ மரணம்.. உளறிய விஜய பிரபாகரன்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால்தான் சுபஸ்ரீ மரணம் சர்ச்சையானது என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் எதை பேசினாலும் சர்ச்சையாகும் அளவுக்கே பேசி வருகிறார். மைக்கை நீட்டினால் என்ன பேசுகிறோம், எதை பேசுகிறோம் என்பது கூட தெரியாது போல இவருக்கு.

கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியின் போது தேமுதிகவின் நிலை குறித்து சிலர் கிண்டலாக பேசினர். அதற்கு விஜய பிரபாகரன், அப்ப ஏன்டா எங்க வீட்டு முன்னாடி கூட்டமா நிக்கறீங்க என்றார். இதையடுத்து அவர் தேமுதிகவின் திருப்பூர் மாநாட்டில் பேசினார்.

அரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்!அரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்!

உளறல்

உளறல்

அப்போது அவர் யாராவது விஜயகாந்த் மீது அவதூறு பேசினால் அப்படியே பளார்னு ஒரு அறை விடுங்கள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில் பேனர் விவகாரத்தில் ஏதோ தாங்கள் அதிமுக கூட்டணியில் இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்ள எதையோ உளறியிருக்கிறார்.

தனியார் பேனர்

தனியார் பேனர்

குன்றத்தூரில் அவர் கூறுகையில் அதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால்தான் சர்ச்சையானது. தனியார் பேனர் விழுந்து பலியாகியிருந்தால் சர்ச்சையாகியிருக்காது.

போட்டியிட தயார்

போட்டியிட தயார்

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் விஜய் கூறியது அவரது சொந்த கருத்து. இடைத்தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என தேமுதிக தலைமை கேட்டுக் கொண்டால் தயார் என விஜயபிரபாகரன் கூறியுள்ளார். பேனர் வைப்பதையே எதிர்த்து வரும் நிலையில் அதிமுக பேனர், தனியார் பேனர் என விஜய பிரபாகரன் பேசி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கதை

புதுக்கதை

இது போல் அரைவேக்காட்டுத்தனமான கருத்துகளால் அவர் இன்னும் அரசியலில் முதிர்ச்சி பெறவில்லை என்றே தெரிகிறது. பேனர் வைக்க போவதில்லை என அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளே உறுதி அளித்துள்ள நிலையில் போனது விலை மதிப்பில்லாத ஓர் உயிர் என்ற உணர்வு கூட இல்லாமல் அதிமுக பேனர், தனியார் பேனர் என விஜய பிரபாகரன் வியாக்கியானம் பேசி வருவது மக்களுக்கு எரிச்சலூட்டுகிறது.

English summary
Vijaya Prabhakaran says that Banner issue becomes controversy only because of it was ADMK's banner. If it was private banner it would not have been made as controversial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X