சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஜயதசமி உற்சாக கொண்டாட்டம்: கோவில்களில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் கோலாகலம்

விஜயதசமி நாளில் கல்வி கற்க தொடங்கினால் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பது ஐதிகம் அந்த வகையில் இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது

Google Oneindia Tamil News

சென்னை: நவராத்திரியின் முக்கிய விழாவான விஜயதசமியை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய கோவில்களிலும், பள்ளிகளிலும் இன்று வித்யாரம்பம் நடைபெற்றது. கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் நெல், பச்சரிசியைக் கொண்டு அச்சரம் எழுதி குழந்தைகள் தங்களின் கல்வியை ஆரம்பித்தனர். பல கல்வி நிறுவனங்களில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையும் வித்யாரம்பமும் நடைபெற்றது.

Recommended Video

    விஜயதசமி நாளில் ஐயப்பன் கோவிலில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட வித்யாரம்பம் - வீடியோ

    விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் 'அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது வித்யாரம்பம் எனப்படுகிறது.

    Vijayadasamy enthusiastic celebration: Vidyarambam commotion for children in temples

    சென்னை எம்ஆர்சி நகர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் உற்சாகமாக நடைபெற்றது. ஏராளமான பெற்றோர் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்து பச்சரிசியில் அச்சரம் எழுதிப் பழக்கினர். அண்ணாநகர், மகாலிங்கபுரம் உள்ளிட்ட முக்கிய ஐயப்பன் கோயில்களில் வித்யரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் காலை முதலே கோயில்களில் திரண்டனர்.

    Vijayadasamy enthusiastic celebration: Vidyarambam commotion for children in temples

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மடியில் வைத்துக் கொள்ள, அவர்களுக்கு முன்பு தாம்பாலத்தில் நெல்மணி, பச்சரிசி வைக்கப்பட்டது. சிறு குழந்தைகளின் கைகளை பிடித்து பெற்றோர்கள் அ, ஆ எழுதி பழக்கினர். தங்க ஊசியைக் கொண்ட குழந்தைகளின் நாவில் அ எனவும் ஓம் என்றும் எழுதினர். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என உறவுகள் பெயர்கள் அனைத்தையும் குழந்தைகளை எழுத வைத்தனர். சில குழந்தைகள் ஓம் என்றும் எழுதினர்.

    Vijayadasamy enthusiastic celebration: Vidyarambam commotion for children in temples

    சேலம் குரங்கு சாவடி பகுதியிலுள்ள ஐயப்பன் திருக்கோயில் குழந்தைகளுக்கு எழுத்து அறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு சரஸ்வதியை வழிபட்டு தங்கத்தில் தேன் தொட்டு குழந்தைகள் நாக்கில் வைத்து அரிசியில் முதல் எழுத்துக்களை எழுத தொடங்கினார்.

    Vijayadasamy enthusiastic celebration: Vidyarambam commotion for children in temples

    சேலம் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு கல்வி கற்க தொடங்கினர் இதேபோல சேலம் மாநகரில் பல்வேறு பகுதிகளில் கோவில்களில் குழந்தைகளுக்கு எழுத்து அறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முதலமைச்சராக வேண்டும் என நான் ஆசைப்படக் கூடாதா..? ஆசைப்பட்டால் என்ன தவறு..? -திருமாவளவன் அதிரடி..! முதலமைச்சராக வேண்டும் என நான் ஆசைப்படக் கூடாதா..? ஆசைப்பட்டால் என்ன தவறு..? -திருமாவளவன் அதிரடி..!

    பல கல்வி நிறுவனங்களில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையும் வித்யாரம்பமும் நடைபெற்றது.

    English summary
    Vidyarambam was held today in the main temples and schools of Tamil Nadu on the eve of Vijayadasamy, the main festival of Navarathri. At the Koothanoor Saraswati Temple, the children started their education by writing Acharam with paddy and paste.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X