சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக உருவாக்கிய "மாஸ்" ஸ்லோகன்.. விஜயகாந்த் போட்ட "மாஸ்க்"கில் வந்தது எப்படி.. ஏதாவது "சிக்னலா"!

கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "ஒன்றிணைவோம் வென்றிடுவோம்" என்று விஜயகாந்த் ஒரு வித்தியாசமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.. அதுமட்டுமல்ல இப்படி வாசகம் பொறித்த போட்டோவை எடுத்து டிபியாக வையுங்கள் என்று தேமுதிக தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.. அதற்கு முன்மாதிரியாக விஜயகாந்த்தே இப்படி மாஸ்க் அணிந்து போட்டோ எடுத்து விழிப்புணர்வு தந்துள்ளார். இந்த அறைகூவல், வேண்டுகோள், போட்டோ, மாஸ்க் எல்லாவற்றையும்விட பரபரப்பாக கவனிக்கப்பட்டு வருவது அந்த மாஸ்கில் உள்ள வாசகம்தான்!!

Recommended Video

    Mask போட்டு Selfi எடுத்து DP வையுங்க | மருத்துவருக்காக விஜயபாஸ்கர் இரங்கல்

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில், "தேமுதிக கழக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் முகக்கவசம் அணிந்து செல்ஃபி எடுத்து அதனை வாட்ஸாப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ப்ரொஃபைல் புகைப்படமாக வைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    "ஒன்றிணைவோம் வென்றிடுவோம்" என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த விழிப்புணர்வு அறிக்கையில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வருகின்ற 3-ம் வரை மாஸ்க் அணிந்த போட்டோவை டிபியாக வைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி கட்சி தலைவரே அந்த மாஸ்க் அணிந்த போட்டோவையும் வெளியிட்டுள்ளார்.

     விஜயகாந்த்

    விஜயகாந்த்

    கடந்த ஒரு வாரமாகவே விஜயகாந்த் அனைவரையும் தன் பக்கம் கவனிக்க வைத்து வருகிறார்.. இறந்த டாக்டர் உடலை புதைக்க மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், எந்த கட்சிகளுமே செய்யாத நற்செயலை அப்போது அறிவித்தார்.. ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்க நிலத்தினை தருவதாக விஜயகாந்த் அறிவித்திருந்தார்.

    அடக்கம்

    அடக்கம்

    இதில் 2 விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டி உள்ளது.. உயிரிழந்த டாக்டரை அடக்கம் செய்தபோது வன்முறை வெடித்தது.. விஜயகாந்த் இடம் தருவதாக சொல்லியதை அதிமுக அரசுதான் சொல்லியிருக்க வேண்டும்.. ஆனால் விஜயகாந்த் அறிவித்தது, அதிமுகவுக்கு ஒரு சறுக்குதான்! ஏற்கனவே ராஜ்யசபா சீட் கேட்டு முட்டி மோதியும் கிடைக்காத விரக்தியில் உள்ளது.

     ஜெயக்குமார்

    ஜெயக்குமார்

    சீட் தருவதாக சொன்னார்கள் என்று பிரேமலதாவும், அப்படி நாங்கள் சொல்லவே இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமாரும் மாறி மாறி எதிர் கருத்துக்களை முன்வைத்தனர். சீட் விவகாரத்தில் தேமுதிக அதிருப்தியும் அடைந்தனர்.. அப்போது முதலே அதிமுகவுடன் தேமுதிக எந்த அளவுக்கு இணக்கமான போக்கை கடைப்பிடித்து வருகிறது என்பது தெரியாமல் குழப்ப நிலை உள்ளது. இப்போது மேலும் இன்னொரு விஷயம் குழப்பத்தை தருகிறது.

     புதிய திட்டம்

    புதிய திட்டம்

    சில தினங்களுக்கு முன்பு "கொரோனா காலத்தில் ஒன்றிணைவோம் வாஞ என்ற தலைப்பில் புதிய திட்டத்தை கடந்த 20-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தி இருந்தார்... இந்த திட்டம் பிகேவின் அடுத்த உத்தி என்றும் சொல்லப்பட்டது.. அதன்படி ஏழை எளியோருக்கு சாப்பாடு, மக்கள் குறைகளை தீர்ப்பது, தன்னார்வலர்களுக்கு உதவுவது போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இந்த திட்டம் உள்ளதாக சொல்லப்படுகிறது. "ஒன்றிணைவோம் வா" என்று ஸ்டாலின் அழைத்து கொண்டிருக்கும் வேளையில், "ஒன்றிணைவோம் வென்றிடுவோம்" என்று விஜயகாந்தும் அழைக்கிறார்.

     தேமுதிக - திமுக

    தேமுதிக - திமுக

    இரு வாசகங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளன.. இது எதேச்சையானதா, அல்லது எதேனும் அரசியல் காரணங்களை உள்ளடக்கியா என்று தெரியவில்லை.. இதை தேமுதிக தரப்புதான் தெளிவுபடுத்த வேண்டும்!! ஆனால், தேமுதிக - திமுக இரு கட்சியுமே மக்கள் நலனுக்காகத்தான் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர் என்றாலும் எங்கோ இடிக்கிற மாதிரியே இருக்கிறது!!!

    English summary
    coronavirus awareness: vijayakanth asks dmdk cadres to wear mask and take selfies
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X