விஜயகாந்த்துக்கு வந்த அதிர்ச்சி.. தக்காளி விலையை பார்த்தீங்களா.. திமுக அரசுக்கு பறந்த அறிக்கை
சென்னை: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தக்காளி மற்றும் பீன்ஸ் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்து வருகின்றனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கவலை தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
3 மேட்டர்.. 3 பேருக்கு சிக்கல்.. ஊட்டியில் ரெய்டு விட்ட ஸ்டாலின்.. மேசைக்கு வந்த முக்கிய ரிப்போர்ட்!
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததை தொடர்ந்து, தமிழக அரசும் குறைக்க முன்வர வேண்டும் என்று அரசியல் கசி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்... இது தொடர்பாக அவர்கள் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றன.

எடப்பாடி பழனிசாமி
இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சொல்லும்போது, மக்கள் பிரச்னைகளை உணர்ந்து தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்... மாநில வரியில் குறைந்த பட்சம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.9 ம் குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.. இதேபோல பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், மத்திய அரசு இரு தவணைகளாக எரிபொருள் மீதான வரியை குறைத்துள்ள நிலையில், தமிழக அரசும், வாட் வரியை குறைக்க வேண்டிய கடமை உண்டு. அதனால் மக்களின் சுமையைபோக்க, பெட்ரோல், டீசல் வரியை குறைக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

72 மணி நேரம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ, பெட்ரோல், டீசல் விலையை 72 மணி நேரத்திற்குள் திமுக அரசு குறைக்க வேண்டும், இல்லாவிட்டால் பாஜக சார்பில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்என எச்சரிக்கை விடுத்துள்ளார்... இந்நிலையில் தேமுதிகவும் தன்னுடைய கோரிக்கையை வெளியிட்டுள்ளது.. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:

தேமுதிக
"பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளன.. இதனால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 வீதம் மத்திய அரசு குறைத்துள்ளது. இதனை தேமுதிக வரவேற்கிறது. கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது போல பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை கேரளா, ராஜஸ்தான் மாநில அரசுகளும் குறைத்துள்ளன.

தக்காளி விலை
இதனால் அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை பெருமளவு குறைந்துள்ளது. அதேபோல் தமிழக மக்களின் நலன் கருதி பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசும் குறைக்க வேண்டும். மேலும் சிலிண்டருக்கான மானியத்தை மத்திய அரசிடம் இருந்து பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தக்காளி மற்றும் பீன்ஸ் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்து வருகின்றனர். சதம் அடித்துள்ள தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.