சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சி திட்டம், நதிகள் இணைப்பு, வேலைவாய்ப்பு திட்டங்கள் இல்லையே.. விஜயகாந்த்

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சி திட்டம், நதிகள் இணைப்பு மற்றும் வேலைவாய்ப்பு திட்டங்கள் இல்லை என தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

Vijayakanth comments on Union Budget 2020

2020-21 மத்திய பட்ஜெட் நிறைகளும் குறைகளும் சமமாக இருக்கிற பட்ஜெட்டாகவே பார்க்க முடிகிறது. வளர்ச்சி என்று பார்த்தால் வருமான வரி விகிதம் குறைப்பு, வீட்டு கடன் சலுகை, விவசாயிகளுக்கு ரூ15 லட்சம் கோடி கடன், வேளாண்மை உட்கட்டமைப்பு, ஜவுளி தொழில்நுட்பம் ஆகியவற்றில் வேலை வாய்ப்பை உருவாக்குவது, விவசாயத்தை இரட்டிப்பாக்குவது, ஏற்றுமதியை ஊக்குவிப்பது என்று பல வரவேற்கக் கூடிய அம்சங்கள் இருக்கும் பொழுதும் பல குறைகளும் இருக்கின்றது.

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை கைவிட்டுவிட்ட நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட்: ப.சிதம்பரம் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை கைவிட்டுவிட்ட நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட்: ப.சிதம்பரம்

இன்றைய பொருளாதாரத்தின் நிலையை அறிந்து தனிநபரின் வருமானத்தை உயர்த்தக் கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் இல்லாதது ஏமாற்றத்தைத் தருகிறது. பல கோடி பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர். இன்னமும் பல மடங்கு வேலைவாய்ப்பை உயர்த்துவதற்கு நல்ல செயல்திட்டங்களை அறிவிக்கவில்லை. விவசாயத்துக்கு மிக முக்கிய காரணமாக இருக்கும் நதிகள் இணைப்பு, நதிகள் இணைப்புக்காக எந்த ஒரு அறிவிப்பும் இந்த மத்திய பட்ஜெட் திட்டத்தில் இல்லை. எனவே குறைகளும் நிறைந்திருக்கிறது; மத்திய அரசின் இந்த பட்ஜெட் நிறைகளும் குறைகளும் இணைந்த மத்திய அம்சம் கொண்ட மத்திய பட்ஜெட்டாகவே பார்க்க முடியாது.

இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

English summary
DMDK General Secretart Vijyakanth's comments on Union Budget 2020-21.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X