சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உப்பிலி- நந்தினியுடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த கேப்டன்.. ஆமா யார் இவர்கள்?

Google Oneindia Tamil News

Recommended Video

    உப்பிலி- நந்தினியுடன் பொங்கல் கொண்டாடிய கேப்டன்

    சென்னை: உப்பிலிக்கும் நந்தினிக்கும் சர்க்கரை பொங்கலை கேப்டன் விஜயகாந்த் ஊட்டினார். இவர்கள் அவரது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான பசுவும் கன்றும் ஆவர்.

    இந்தியா முழுவதும் பொங்கல் விழா வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் இந்த விழா பொங்கல் விழாவாகவும் தை முதல் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

    போகி, பெரும் பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் ஆகிய 4 நாட்களாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. அதன் படி போகி பண்டிகை தை மாதத்தை வரவேற்கும்விதமாக பழையன கழிதல் புதியன புகுதல் என்ற பழமொழியை பிரதிபலிக்கும் விழாவாக உள்ளது.

     'இனிய தை பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்' .. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழில் பொங்கல் வாழ்த்து 'இனிய தை பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்' .. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழில் பொங்கல் வாழ்த்து

    மாட்டுப் பொங்கல்

    மாட்டுப் பொங்கல்

    பொங்கல் அன்று சூரியனுக்கு வணக்கம் செலுத்தும் நாளாகவும் விவசாயிகளுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இதற்கு அடுத்து வரும் மாட்டு பொங்கல் தினத்தன்று மாடுகளை வணங்கும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

    சுத்தமாக குளிக்க வைத்து

    சுத்தமாக குளிக்க வைத்து

    அந்த வகையில் மாடுகளை வைத்திருப்போர் அவற்றை சுத்தமாக குளிக்க வைத்து கொம்புகளுக்கு பெயின்ட் அடித்து அலங்கார பொருட்களை மாட்டி, புதிய கயிறுகள், சங்கிலிகள் கட்டி அலங்காரம் செய்து வழிப்படுவது வழக்கம்.

    ட்விட்டரில் புகைப்படம்

    தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்திற்கு நாய்கள், மாடுகள் வளர்ப்பது மிகவும் பிடிக்கும். அவரது வீட்டில் இந்த செல்லப்பிராணிகள் உள்ளன. மாட்டு பொங்கலை முன்னிட்டு அவர் வீட்டு மாடுகளுக்கு சர்க்கரை பொங்கல் ஊட்டும்படியான புகைப்படத்தை விஜயகாந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

    மாட்டுப் பொங்கல்

    மாட்டுப் பொங்கல்

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் எங்கள் வீட்டு செல்லப்பிராணிகள் நந்தினி (பசு) மற்றும் உப்பிலிக்கு (கன்று) சர்க்கரை பொங்கல் ஊட்டி மாட்டுப் பொங்கலை கொண்டாடினோம் என்றார்.

    English summary
    Vijayakanth feeds sweet pongal to his pet cattles ahead of Mattu Pongal Celebration. Their name is Nandhini and Uppili.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X