சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிழித்து எறியப்பட்ட தேமுதிக கொடிகள்.. வண்டலூர் கூட்டத்தில் அதிமுகவினர் ஆவேசம்

Google Oneindia Tamil News

சென்னை:4 தொகுதிகள் என்ற ஒதுக்கீட்டை தேமுதிக ஏற்க மறுத்துவிட்டது. பாஜக மேடையில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் படமும் கடைசி நேரத்தில் அகற்றப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலில் திமுகவின் கூட்டணி இறுதி வடிவம் பெற்றுவிட்டது. விசிக, மதிமுக, இடதுசாரிகள் என பெரும்பாலான கட்சிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது. கூட்டணி கட்சிகளுக்கு போக திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அதிமுக முகாமில் தொடக்கத்தில் ஜெட் வேகத்தில் சென்றது போல காணப்பட்டாலும் தற்போது சிக்கலில் இருப்பதாக தெரிகிறது. திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டது.

<strong>கால் எங்க இருக்கு.. அதை முதலில் கன்பர்ம் செஞ்சுக்கணும்.. டாக்டர் ராமதாஸ் டிவீட்! </strong>கால் எங்க இருக்கு.. அதை முதலில் கன்பர்ம் செஞ்சுக்கணும்.. டாக்டர் ராமதாஸ் டிவீட்!

அதிமுகவின் முயற்சி

அதிமுகவின் முயற்சி

இந் நிலையில் கூட்டணியில் விஜயகாந்தை கொண்டு வர அதிமுக கடுமையாக முயற்சித்து வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

உடன்பாடு இல்லை

உடன்பாடு இல்லை

சந்திப்பில், கூட்டணி தொடர்பாக எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இன்று பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் இடம்பெறுவார்கள் என்பதால், இன்றைக்குள் கூட்டணியை இறுதி செய்ய அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.

முக்கிய ஆலோசனை

முக்கிய ஆலோசனை

இந்நிலையில், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன், விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளிடம் விஜயகாந்த் கருத்து கேட்டதாக கூறப்படுகிறது.

ஆலோசனை நீடிக்கிறது

ஆலோசனை நீடிக்கிறது

2வது நாளாக இன்றும் ஆலோசனை நீடிக்கிறது. அப்போது.. கூட்டணியில் தாம் கேட்கும் தொகுதிகள் குறித்தும்... அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் யாரும் உறுதி தராததால் முடிவு இழுபறியாகி கொண்டிருப்பதாக விவாதிக்கப்பட்டதாக கூறுகிறது.

கட்டாயம் இடம்பெறும்

கட்டாயம் இடம்பெறும்

ஆனால்... கூட்டணியில் தேமுதிக கட்டாயம் இடம்பெறும் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியிருந்தார். பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜனும் உறுதியாக கூறியிருந்தார்.

படம் அகற்றப்பட்டது

படம் அகற்றப்பட்டது

இந்நிலையில் பரபரப்பு திருப்பமாக... பாஜக பொதுக்கூட்ட மேடையில் இருந்த விஜயகாந்தின் படம் அகற்றப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.

திமுகவுடன் பேச்சு

திமுகவுடன் பேச்சு

தேமுதிக கொடிகளும் அகற்றப்பட்டுள்ளன. பேனர்களும் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு உள்ளன. இதுபுறம் இருக்க.. திமுக பொருளாளர் துரைமுருகனுடன் தேமுதிக முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசியிருக்கின்றனர். ஒரே நேரத்தில் இரு முக்கிய கட்சிகளுடன் தேமுதிக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

தேமுதிக கொடிகள் கிழிப்பு

தேமுதிக கொடிகள் கிழிப்பு

அதேபோல தேமுதிக கொடிகளையும் அதிமுகவினர் கிழித்து தூக்கி குப்பையில் போட்டு விட்டனர். கிழித்தெறியப்பட்ட கொடிகள் ஆங்காங்கு குவியல் குவியலாக காணப்பட்டது.

English summary
The AIADMK and the BJP are somewhat shocked by the fact that Vijayakanth is not going to participate in Prime Ministerial Modi's public rally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X