சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதான் விஜயகாந்த்.. "யாரும் கஷ்டப்பட கூடாது, சரியா".. சூப்பராக "செட்டில்" செய்து.. சபாஷ்!

Google Oneindia Tamil News

சென்னை: இதான் விஜயகாந்த்.. தன் கட்சிக்காரர்களுக்கு ஒரு துயரம் என்றதும் ஓடோடி வந்து தாங்கி பிடித்து துயர் துடைத்துள்ளார்.. இந்த செய்திதான் தேமுதிகவினருக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தி வருகிறது.

தொகுதி ஒதுக்கீடுகள் நடந்தது முதலே, சில அதிருப்திகள் தேமுதிகவிலேயே நிகழ்ந்தன.. விருதாச்சலம் தொகுதியில் கட்சி நிர்வாகிகள் பிரேமலதாவுக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காமல் போகவும், பல்வேறு மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகரப் பொறுப்பாளர்கள் எல்லாருமே விருத்தாசலம் தொகுதிக்கு வந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தலைமை உத்தரவிட்டிருந்தது.

அதன்படியே, தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் இருந்து அனைத்து பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் விருதாச்சலம் சென்றுள்ளனர்..

டெல்லிக்கு பறந்த டெல்லிக்கு பறந்த "ரிப்போர்ட்".. "அவர்" மீது வருத்தமா?.. என்ன நடக்கிறது பாஜகவில்..?

புகார்

புகார்

ஆனால், அவர்களுக்கு எந்தவித வசதியும் செய்து தராமலும், செலவுக்கு பணம் தராமலும் தலைமை இருந்ததாகவும், அதனால், நொந்து போன தேமுதிகவினர், ஆளாளுக்கு கிளம்பி சொந்த ஊருக்கு போய்விட்டதாகவும் அடுத்தடுத்த செய்திகளும் கசிந்தன. இதற்கு பிறகு, இன்னொரு பிரச்சனை கட்சிக்குள் வெடித்தது.. கூட்டணியில் கட்சி தலைமையானது, வேட்பாளர்களுக்கு செலவுக்கு பணம் தந்திருந்தும், அவை முறையாக போய் சேரவில்லை என்ற புகார் கிளம்பியது.. அப்போது கொரோனா தொற்று பாதிப்பில் சுதீஷ் இருந்ததால், அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்தது..

பிரேமலதா

பிரேமலதா

பிரேமலதாவும் விருத்தாசலம் தொகுதியை விட்டு வேறு வேட்பாளர்களையும் பெரிதாக கண்டுகொள்ளாத நிலையில், பல்வேறு இடங்களில் வேட்பாளர்கள், நிர்வாகிகள் இறங்க வேலை செய்வதில் சுணக்கம் காட்டியபடியே இருந்திருக்கறார்கள்.. அதனால்தான், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள், ஒவ்வொரு வேட்பாளருக்கும், தலா 3 லட்சம் ரூபாய் தருவதாக தலைமையில் இருந்து ஒரு தகவல் சென்றதாம்.. "என்னது, வெறும் 3 லட்சமா? இதை வைத்து கொண்டு என்ன செய்வது?" என்று யாருமே அந்த பணத்தை வாங்க மறுத்துவிட்டார்களாம்.

சிக்கல்

சிக்கல்

தேர்தல் நடந்து முடிவதற்குள் இப்படி எத்தனையோ பூசல்கள், முனகல்கள் வந்து கொண்டே இருந்தது.. தேமுதிக வேட்பாளர்களுக்கு கட்சி சார்பில் நிதி அளிக்கவில்லை என்றும், சொந்த பணத்தையே வேட்பாளர்கள் செலவு செய்ததாகவும் தேர்தல் முடிந்த பிறகும் புலம்பல்கள் இருந்து கொண்டே இருந்தன.. இதில், சிலர் கடன் வாங்கி செலவு செய்திருக்கும் நிலையில், தேர்தலுக்காக செலவு செய்த பணத்தை கட்சி தலைமை வழங்கினால் நன்றாக இருக்கும் என்று வேட்பாளர்கள் தலைமையிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர்...

செட்டில்

செட்டில்

இந்த விஷயம் விஜயகாந்தின் காதுகளுக்கு எட்டி உள்ளது.. உடனே, எந்தெந்த வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்தார்கள் என்ற கணக்கை தருமாறு தலைமை நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் ஒரு உத்தரவு போட்டாராம். இதையடுத்து, வேட்பாளர்கள், தாங்கள் செலவு செய்த தொகை குறித்த முழு விவரங்களை அனுப்பி வைக்கவும், உடனடியாக அந்த பணத்தை விஜயகாந்த் செட்டில் செய்துள்ளார்..

பூரிப்பு

பூரிப்பு

இது கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... யாரும் என்னால கஷ்டப்படாதீங்க, நஷ்டப்படாதீங்க, என்னால யாரும் எதையும் இழக்காதீங்க என்று விஜயகாந்த் சொன்னாராம்.. ஏற்கனவே தேமுதிகவால் நொந்து போயிருந்த நிர்வாகிகள், ரிசல்ட் வந்ததும் வேறு முடிவுக்கு போகலாம் என்று இருந்தார்களாம்.. அதற்குள் கேப்டன் கூல் செய்துவிட்டார், எங்களை திக்குமுக்காட செய்துவிட்டார் என்று நெகிழ்ந்து சொல்கிறார்கள் தேமுதிகவினர்...!

English summary
Vijayakanth helps and DMDK candidates happy about their Election expenses
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X