சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வுக்கு ஆதரவு... விஜயகாந்துக்கு இருந்த கொஞ்ச நஞ்ச ஆதரவையும் வெச்சு செஞ்சுட்டாங்களே!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மாணவர்களின் உயிரை குடிக்கும் நாசகார நீட் தேர்வுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆதரவு தெரிவித்து வெளியிட்ட அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் விஜயகாந்துக்கு 45% பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்த் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். மேலும் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில், முன்னிலை வகித்த மாணவ - மாணவியருக்கு வாழ்த்துகளையும் விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.

நீட்டுக்கு ஆதரவு

நீட்டுக்கு ஆதரவு

அத்துடன் மாணவர்களே விரும்பி நீட் தேர்வை ஏற்றுக் கொண்டதாகவும் அதை அரசியலாக்க வேண்டாம் என்றும் விஜயகாந்த் அந்த அறிக்கையில் வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பாக நமது தமிழ் ஒன் இந்தியா தளத்தில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.

விஜயகாந்துக்கு எதிர்ப்பு

விஜயகாந்துக்கு எதிர்ப்பு

நீட் தேர்வுக்கு விஜயகாந்த் ஆதரவு? என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் மொத்தம் 14,349 பேர் பங்கேற்றனர். இவர்களில் 6,459 பேர் அதாவது 45.01% பேர் விஜயகாந்த் தெரிவித்த கருத்து கடும் கண்டனத்துக்குரியது என பதிவு செய்துள்ளனர்.

கருத்து சரியே

கருத்து சரியே

அதே நேரத்தில் விஜயகாந்தின் கருத்து சரிதான் என 3,915 பேர் (27.28%) தெரிவித்துள்ளனர். இப்படி கருத்து தெரிவித்தால் தேமுதிக எப்படி வளரும் என்கிற ஆப்சனை 3,088 பேர் (21.52%) தேர்வு செய்துள்ளனர். எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என 887 பேர் வாக்களித்துள்ளனர்.

செல்வாக்கு சரிவு

செல்வாக்கு சரிவு

எதிர்க்கட்சி தலைவராக விஸ்வரூபம் எடுத்த விஜயகாந்த், குடும்பத்தினர் தலையீட்டால் கட்சியை தொலைத்தார். பாஜகவை ஆதரிக்கிறோம் என்கிற பெயரில் நாசகார நீட் தேர்வுக்கு ஆதரவு இருந்த கொஞ்சம் ஆதரவையும் பறிகொடுத்துவிட்டாரே!

English summary
According to the One India Tamil Poll, DMDK General Secretary Vijayakanth losed the public support on the NEET issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X