சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமர் தலைமையில் விஜயகாந்த் மகன் திருமணம்...? தேதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் தேமுதிக

Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மகன் திருமணத்தை பிரதமர் மோடி தலைமையில் நடத்த வேண்டும் என விரும்புகிறாராம்.

இதற்காக பாஜக தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர் ஒருவர் மூலம் மோடியை அணுகி தேதி கேட்க பிரேமலதா விஜயகாந்தும், அவரது தம்பி எல்.கே.சுதீசும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தனது திருமணம் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற நிலையில், தன்னுடைய மகன் திருமணம் மோடி தலைமையில் நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறாராம் கேப்டன்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ம.நீ.ம. போட்டி...? நிர்வாகிகளிடம் கமல் ஆலோசனைநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ம.நீ.ம. போட்டி...? நிர்வாகிகளிடம் கமல் ஆலோசனை

அரசியல்

அரசியல்

விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் கடந்த ஒரு வருட காலமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அவருக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கோவையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவை கரம் பிடிக்க உள்ளார் விஜயபிரபாகரன்.

விரைவில்

விரைவில்

திருமணம் நிச்சயிக்கப்பட்டதை தொடர்ந்து கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது விஜயகாந்த் குடும்பம். நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது வீட்டில் நடக்கும் முதல் சுப நிகழ்வு என்பதால் இந்த திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என விரும்புகிறார் பிரேமலதா விஜயகாந்த்.

பிரதமர் தலைமை

பிரதமர் தலைமை

பிரதமர் மோடி தலைமையில் தனது மகனுக்கு திருமணம் நடைபெற வேண்டும் என விரும்புகிறாராம் விஜயகாந்த். இதனால் பிரதமர் மோடியிடம் தேதி கேட்பதற்கான நடவடிக்கைகள் ஒரு புறம் நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர் ஒருவர் மூலம் அதற்கான பணிகளை எல்.கே.சுதீஷ் மேற்கொண்டு வருகிறார்.

பிரதமர் தேதி

பிரதமர் தேதி

பொதுவாக திருமண நிகழ்ச்சிகளுக்கு தேதி கொடுப்பதை விரும்பாதவர் பிரதமர் மோடி. பாதுகாப்பு காரணங்களுக்காக திருமண வீட்டாருக்கு அதிகாரிகள் தொல்லை தந்துவிடக்கூடாது என்பதில் மோடி கவனமுடன் இருப்பார். ஆனால் விஜயகாந்திற்காக தேதி கொடுக்கிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

English summary
Vijayakanth's son marriage cheifguest Is Prime Minister?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X