சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினி அங்கிள் சொன்னதை பாலோ பண்ணுவேன்… இன்ஸ்டாகிராமில் நெகிழ்ந்த சின்ன கேப்டன் விஜய பிரபாகரன்

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினியை பற்றி இன்ஸ்டாகிராமில் நெகிழ்ந்த விஜய பிரபாகரன்

    சென்னை: ரஜினி அங்கிள் சொன்னதை பின்பற்றுவேன் என்று இன்ஸ்டாகிராமில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பகிர்ந்துள்ளார்.

    தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பங்கள் கடந்த சில நாட்களாக நடந்து வருகின்றன. முதலில் பியூஷ் கோயல் விஜயகாந்தை நேரில் சந்தித்தார். ஆனால்... யாரும் அதை பற்றி பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை.

    அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... விஜயகாந்தை சந்தித்தார். பக்கென்று தமிழக அரசியல் பற்றிக் கொண்டு விட்டது. உடனடியாக தமிழக அரசியல் களத்தின் தற்காலிக அரசியல் முகாமாக விஜயகாந்தின் வீடு மாறி விட்டது.

    வைரலான காந்த சந்திப்பு

    வைரலான காந்த சந்திப்பு

    அதிலும் .. விஜயகாந்தை அவரின் வீட்டில் ரஜினி காந்த் சந்தித்து நலம் விசாரித்தது... தமிழகத்தின் வைரலான செய்தியாக மாறிவிட்டது. அந்த சந்திப்பின் போது விஜயகாந்தின் ஒட்டுமொத்த குடும்பமே ரஜினியுடன் பேசியது.

    புகைப்படங்கள் வெளியீடு

    புகைப்படங்கள் வெளியீடு

    அதில் விஜயகாந்தை பார்க்க ரஜினிகாந்த் சென்றிருந்த போது, விஜய்காந்தின் மகன் விஜயபிரபாகரனின் கையை பிடித்துக் கொண்டு பேசிய புகைப்படங்கள் வெளியாகின. மேடையில் உன்னுடைய அரசியல் பேசும் காணொளியை பார்த்தேன்.

    சிறந்த பேச்சு என பாராட்டு

    சிறந்த பேச்சு என பாராட்டு

    மிக சிறப்பாக பேசியுள்ளாய். தொடர்ந்து இதே போல் செயலாற்ற வேண்டும் என்று விஜய பிரபாகரனை பார்த்து ரஜினிகாந்த் கூறியுள்ளார். அந்த சந்திப்பையும்.. அது தொடர்பான நிகழ்வுகளையும் விஜய பிரபாரகன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    ரஜினி அங்கிள்

    ரஜினி அங்கிள்

    ரஜினி அங்கிள் இப்படி கூறியது மிக சிறந்த தருணமாக கருதுகின்றேன். நான் தொடர்ந்து அந்த நற்பணியை பின்பற்றுவேன் என்று விஜய பிரபாகரன் பதிவிட்டுள்ளார்.

    English summary
    Vijayakanth's son Vijaya Prabhakaran shared in the Insta Gram to follow Rajinikanths advice.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X