சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தொண்டர்கள்தான் எனது முதல் கடவுள்.. விரைவில் மீண்டு வருவேன்.. விஜயகாந்த் உருக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: தொண்டர்களே எனது முதல் கடவுள் என்றும் மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் மீண்டு வருவேன் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்தார்.

சென்னை கொரட்டூரில் தேமுதிக சார்பிலான பொங்கல் விழா நடைபெற்றது. அப்போது 101 பானைகளில் பொதுமக்களுடன் இணைந்து இந்த விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று பொங்கல் பரிசுகளை வழங்கினர். இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார்.

கொல்கத்தா துறைமுகத்துக்கு ஷியாமா பிரசாத் முகர்ஜி பெயரை சூட்டினார் பிரதமர் மோடி- மமதா புறக்கணிப்பு கொல்கத்தா துறைமுகத்துக்கு ஷியாமா பிரசாத் முகர்ஜி பெயரை சூட்டினார் பிரதமர் மோடி- மமதா புறக்கணிப்பு

மீண்டு வருவேன்

மீண்டு வருவேன்

அவர் பேசுகையில் எனக்கு மொத்தம் 5 கடவுள்கள் உள்ளன. எனக்காக பிரார்த்தனை செய்யும் தொண்டர்களே எனது முதல் கடவுள். விரைவில் பூரண உடல்நலம் பெற்று மீண்டு வருவேன் என உருக்கமாக பேசினார்.

இஸ்லாமியர்கள்

இஸ்லாமியர்கள்

முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சிலர் குரல் எழுப்புகிறார்கள். இந்தியா ஒரு இந்து நாடாக இருந்தாலும் இங்கு இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரத்துவத்துடன் வாழ்கிறார்கள்.

ஆட்டம்

ஆட்டம்

இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் தீவிரவாத செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது. விஜயகாந்துக்கு அனைத்து மதமும் ஒன்றுதான். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் தேமுதிகவின் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது.

பொங்கல் வாழ்த்துகள்

பொங்கல் வாழ்த்துகள்

அடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிக இடங்களை பிடிக்க தொண்டர்கள் மிகக் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார். இந்த விழாவில் விஜயகாந்து தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் பொங்கல் வாழ்த்துகளை கூறினார்.

English summary
DMDK General Secretary Vijayakanth says that his cadres are the first god for him. To serve the people he will recover soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X