சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விஜயகாந்த் தமிழக முதல்வர் ஆவதற்கான காலம் ஒருநாள் வரும்.. பிரேமலதா ஆருடம்.. அதிரடி பேச்சு!

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி

    சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக முதல்வர் ஆவதற்கான காலம் ஒருநாள் வரும் என்று தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    இன்று தேமுதிக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் கூட்டம் நடந்தது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், பார்த்த சாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் 67 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். உள்ளாட்சி தேர்தல் குறித்து இதில் ஆலோசனைகள் செய்யப்பட்டது.

    என்ன பேசினார்

    என்ன பேசினார்

    இதில் பேசிய தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக போட்டியிடும். விஜயகாந்த் கண்டிப்பாக பிரச்சாரம் செய்வார். தேர்தல் அறிவித்தும் பணிகளை கண்டிப்பாக தொடங்கும்.

    முதல்வர்

    முதல்வர்

    விஜயகாந்த் போல ஒருவர் முதல்வராக வர மக்கள் கொடுத்து வைக்கவில்லை. தேமுதிக கட்சியை தொடங்கியதற்கு காரணமே இதுதான். அப்போதே இந்த குறிக்கோளுடன்தான் கட்சியை தொடங்கினோம். அதற்காக பணிகளை செய்தோம்.

    நினைவு

    நினைவு

    ஆனால் அந்த கனவு நினைவாக்கவில்லை. ஆனால் விஜயகாந்த், முதல்வர் ஆவதற்கான காலம் ஒருநாள் வரும். மக்கள் மனம் தளர வேண்டாம். எங்களுக்கான காலம் வரும். விஜயகாந்த் முதல்வராவார்.

    கடைசி நேரம்

    கடைசி நேரம்

    லோக்சபா தேர்தலில் கடைசி நேரத்தில்தான் கூட்டணி உருவானது. இதனால் அதிமுகவிடம் அதிக இடங்களை கேட்க முடியவில்லை. அதுதான் கூட்டணி தர்மம். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் நிறைய இடங்களை கேட்போம்.

    கூட்டணி தொடரும்

    கூட்டணி தொடரும்

    உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிடம் இருந்து அதிகமான இடங்களைக் கேட்டுப்பெறுவோம். தொண்டர்கள் எல்லோரும் மகிழும் வண்ணம் கூட்டணி அமையும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

    English summary
    DMDK chief Vijayakanth will become CM on TN one day says Premalatha Vijayakanth.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X