சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏன் திடீர்னு வந்தார்.. விஜயகாந்த்தை பிரச்சாரத்திற்காக அழைத்து வந்ததற்கு இதுதான் காரணமா?

தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் இன்று பிரச்சாரம் செய்ய உள்ளது ஏன்?

Google Oneindia Tamil News

Recommended Video

    VIjayakanth Campaign: திடீர்னு விஜயகாந்த்தை பிரச்சாரத்திற்காக அழைத்து வருவதற்கு காரணம் என்ன?- வீடியோ

    சென்னை: ஏன் இன்னைக்கு திடீர்னு விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய வந்தாரு? நாளையோட பிரச்சாரம் முடிய போகிறது நேரத்தில் இப்படி ஒரு பிரச்சாரம் எதற்கு? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    விஜயகாந்த்துக்கு உடம்பு சரியில்லைன்னு நமக்கு தெரியும். அதனாலதான் 4 வருஷமா ஒதுங்கியே இருக்கார். கூட்டணி சம்பந்தமான விஷயம் வரும்போதும், பிரேமலதாவும், சுதீஷூம்தான் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தார்கள்.

    நேர்காணலின்போதும் விஜயகாந்த், தன் ஒற்றை விரலால் தொண்டையை காரணம் காட்டி பேச முடியாது என்று சைகையால் சொல்லிவிட்டார். அமெரிக்காவில் இருந்து ஊருக்கு வந்ததில் இருந்து இதுவரை மக்களிடம் விஜயகாந்த் பேசவே இல்லை. தன் கட்சி தொண்டர்களிடம் கூட தேர்தல் சம்பந்தமாக உற்சாகம் தரும்படி எதுவுமே சொல்லவில்லை.

    எனக்காக பிரார்த்தனை செய்த எல்லோருக்கும் நன்றி.. விஜயகாந்த் உருக்கம்.. வீடியோ! எனக்காக பிரார்த்தனை செய்த எல்லோருக்கும் நன்றி.. விஜயகாந்த் உருக்கம்.. வீடியோ!

    கடைசி நேர பிரச்சாரம்

    கடைசி நேர பிரச்சாரம்

    ஆனால் 2 தினங்களுக்கு முன்பு பிரேமலதா பேட்டி ஒன்றில், கேப்டன் இன்னும் 2 நாளில் பிரச்சாரத்துக்கு வருவார் என்று சொல்லிவிட்டு போனார். நாளையுடன் பிரச்சாரம் முடிவடையும் நிலையில், இப்படி ஒரு கடைசி நேர பிரச்சாரம் ஏன்? என்றால் அதற்கு அநேகமாக இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும்.

    எப்படி இருக்கிறார்?

    எப்படி இருக்கிறார்?

    முதல் காரணம், கடைசிவரை விஜயகாந்த் இல்லாமலேயே இந்த தேர்தல் நடந்துமுடிந்து விட்டால் வாக்கு வங்கி காணாமலேயே போய்விடும். அதுவும் இல்லாமல் "இப்போது விஜயகாந்த் எப்படி இருக்கிறார், அவரை வீட்டிலேயே வைத்து மறைத்து விடுகிறார்களே" என்ற பல சந்தேகங்கள் பொதுமக்களிடையே வந்து போகிறது. அதனால் இதுபோன்ற காரணங்களை தெளிவுபடுத்தவே விஜயகாந்த்தை பிரச்சாரத்துக்கு அழைத்து வந்தது போல தெரிகிறது.

    சொதப்பல்

    சொதப்பல்

    இரண்டாவது காரணம், தேமுதிக தேய்ந்துபோய், பலமிழந்து, கலையிழந்து, உற்சாகம் இழந்து, காணப்படுகிறது. விஜயகாந்த் என்ற ஒற்றை மனிதனுக்காக கூடிய கூட்டம் இன்று காணவில்லை. பிரேமலதா செய்து வரும் பிரச்சாரங்கள் எல்லாமே சொதப்பல்தான். ஒன்றும் சொல்லி கொள்வது மாதிரி இல்லை.

    சாராம்சம்சங்கள்

    சாராம்சம்சங்கள்

    வாயை திறந்தால் சர்ச்சைகள் வெடிக்கிறது, இல்லையென்றால் திமுகவை வறுத்தெடுப்பது.. இதுதான் பிரச்சாரத்தின் சாராம்சமாக உள்ளது. சில இடங்களில் பிரச்சாரத்துக்கு சரியான நேரத்துக்கு பிரேமலதா செல்வதில்லை. சில இடங்களில் பிரச்சார வேனை விட்டுக்கூட கீழே இறங்குவதில்லை. இதெல்லாம் தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்களுக்கே அதிருப்தியை தந்துவிட்டது. விஜயகாந்த் மகன் அன்று பேசிய பேச்சு, இன்னும் யாராலும் ஜீரணிக்கவே முடியவில்லை.

    விமர்சனம்

    விமர்சனம்

    இது போன்ற ஏராளமான எக்குத்தப்புகளை மறைக்கவும், தேமுதிக மீது இப்போது படிந்து வரும் பிம்பத்தை மறைக்கவும்தான் விஜயகாந்த் வெளியே வரவழைக்கப்பட்டுள்ளார் என சொல்லப்படுகிறது. தேமுதிக மீது ஆயிரம் குறை சொன்னாலும், விமர்சனமே செய்தாலும், கேப்டனை நேரில் பார்த்ததும் எல்லாமே பஞ்சு பஞ்சாய் நம் மக்களுக்கு பறந்து போய்விட்டது. ஆனாலும் தட்டு தடுமாறி அவர் பேசியதைதான் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை என்பதே உண்மை!

    English summary
    Even though health is affected, DMDK Leader VIjayakanth will campaign for 2 days in Chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X