• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

திடீர்னு தேம்பி தேம்பி அழுத பிரேமலதா.. வேற வழியேயில்லை.. "பிரம்மாஸ்திரத்தை" கையில் எடுக்க முடிவு

Google Oneindia Tamil News

சென்னை: விருதாச்சலத்தை தன்வசப்படுத்த, கடைசி பிரம்மாஸ்திரத்தையும் கையில் எடுக்க போகிறார் பிரேமலதா.. அவர்தான் விஜயகாந்த்..!

கூட்டணி வைக்க பலரும் தயங்கிய நிலையில், சக கட்சிகள் கூட்டணி கதவை அடைத்துவிட்ட நிலையில், அமமுக மட்டும் கதவை திறந்துவைத்தது..

இந்த திருமாவளவனை விலைபேச எந்த கொம்பனும் பிறக்கல.. பஸ்ஸ கொளுத்த கத்துதந்தது அவங்கதான்.. திருமா ஆவேசம்இந்த திருமாவளவனை விலைபேச எந்த கொம்பனும் பிறக்கல.. பஸ்ஸ கொளுத்த கத்துதந்தது அவங்கதான்.. திருமா ஆவேசம்

கோவில்பட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற சுயநல காரணமும் இருந்தாலும்கூட, பரவலாக உள்ள தேமுதிகவின் செல்வாக்கு அமமுகவுக்கு கிடைக்கும் என்று தினகரன் நம்பினார். அதனாலேயே தேமுதிகவுக்கு 60 சீட்டை தந்து, அவர்கள் விரும்பி கேட்ட விருத்தாச்சலம் தொகுதியையும் ஒதுக்கியது.

முகாம்

முகாம்

15 வருஷத்துக்கு முன்பு, விஜயகாந்த்துக்கு வெற்றியை வாரி தந்ததை நம்பி இப்போது விருதாச்சலத்தில் களம் இறங்கி உள்ளார் பிரேமலதா. இதற்காக அங்கேயே முகாமிட்டும் வருகிறார்.. தீவிரமாக களப்பணியும் ஆற்றி வருகிறார்... விருதாச்சலத்தை தேமுதிகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தை முழக்கமிட்டும் வருகிறார்.

பிரச்சாரம்

பிரச்சாரம்

இதற்காகவே பிற இடங்களுக்குகூட பிரச்சாரத்துக்கு செல்ல முடியாது என்பதை முன்னாடியே ஓபனாக சொல்லிவிட்டார்.. எனினும், விருதாச்சலத்திலேயே ஒரு சில புகைச்சல்கள் இருக்கின்றன.. விருதாச்சலம் தொகுதியில் கட்சி நிர்வாகிகளே பிரேமலதாவுக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தகவல்கள் வந்தன..

பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

தேமுதிக போட்டியிடும் 60 தொகுதிகள் சார்ந்த மாவட்ட செயலாளர்களை தவிர மற்ற மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகரப் பொறுப்பாளர்கள் அனைவரும் விருத்தாசலத்துக்கு தேர்தல் பணி செய்ய வந்தும், அவர்களை முறையாக தேமுதிக தரப்பு கவனிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.. கையில் செலவுக்கு காசு தராமல், தங்க வைக்க எந்தவித வசதியும் செய்து தராததால், நொந்து போன தேமுதிகவினர், ஆளாளுக்கு கிளம்பி சொந்த ஊருக்கு கிளம்பி போனதாகவும் சொல்லப்பட்டது. இதனால் இத்தனை நாட்கள் தன்னந்தனியாகவே தனக்காக ஓட்டு கேட்டு களப்பணி ஆற்றிவருகிறார்..

விருதாச்சலம்

விருதாச்சலம்

அப்படித்தான், விருத்தாசலத்தில் வீரரெட்டிகுப்பம், மாத்துார் போன்ற இடங்களிலும் பிரேமலதா பிரசாரம் செய்தார்... அப்போது அந்தந்த பகுதிகளில் இருந்த பெண்களிடம் காரில் இருந்தபடியே கலந்துரையாடி இருக்கிறார்.. அப்போது ஒரு பெண், விஜயகாந்த் பற்றி உணர்ச்சிவசப்பட்டு பேச ஆரம்பித்துள்ளார்.. கேப்டன் குணம் அப்படி, கேப்டன் மாதிரி வருமா? என்றெல்லாம் சொல்லவும், பிரேமலதா கண்ணீர் விட்டு, தேம்பி தேம்பி அழுதுள்ளார்.. இந்த அளவுக்கு இந்த தொகுதியில் கேப்டனுக்கு இன்னமும் ஆதரவு அலை இருப்பதை பார்த்து மிரண்டு போனார்..

அஸ்திரம்

அஸ்திரம்

எனவே, கடைசி அஸ்திரமாக விஜயகாந்த்தை இந்த தொகுதியில் பிரச்சாரத்தில் களமிறக்க முடிவு செய்துள்ளார்.. எப்படியும் விஜயகாந்த் நேரில் வந்தாலே பெண்கள் மத்தியில் உள்ள ஆதரவு மேலும் பெருகும் என்று கணக்கு போட்டுள்ளார்... அதனால் நாளைக்கு சாயங்காலம் பிரச்சாரம் முடிவதற்குள் விஜயகாந்த் இந்த தொகுதிக்குள் வந்துவிடுவார் என்று தெரிகிறது.. போதாக்குறைக்கு விஜய பிரபாகரனும் இந்த பிரச்சாரத்தில் ஜாயிண்ட் ஆகிறாராம்.

ஓட்டுக்கள்

ஓட்டுக்கள்

விஜயகாந்த் பேசி பிரச்சாரம் செய்யும் நிலைமையில் இல்லை என்றாலும், அவர் தொகுதிக்குள் வந்தாலே தேமுதிக மவுசு எகிறும் என்று நம்பப்படுகிறது... ஆனால், முன்பு போல தேமுதிகவுக்கு மிகப்பெரிய அலை என்பது தொகுதிக்குள் வீசவில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. திமுக, அதிமுக இரு தரப்புக்கு இடையில் 3வது இடத்துக்குதான் பிரேமலதா தள்ளப்படுவார், ஆனால், நிச்சயம் பெருவாரியான ஓட்டுக்களை பிரித்து டஃப் தருவார் என்றும் சொல்கிறார்கள்..

அஸ்திரம்

அஸ்திரம்

அதுமட்டுமல்ல, ஏற்கனவே இந்த தொகுதிக்கு பெரிய அளவில் தேமுதிக எதுவும் செய்யாததால்தான், 2011 தேர்தலில், ரிஷிவந்தியம் தொகுதிக்கு விஜயகாந்த் மாறினார்... அதனால், இந்த அதிருப்தியும் தேமுதிக மீது மக்களுக்கு உள்ளது.. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த முறை பாமக அல்லது காங்கிரஸ் வேட்பாளருக்கே பலத்த போட்டி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.. இதெல்லாம் பிரேமலதாவுக்கும் தெரிந்தாலும், விஜயகாந்த் என்ற கடைசி ஆயுதம் & அஸ்திரத்தை பலமாக நம்பி உள்ளார்.. பார்ப்போம்!

English summary
Vijayakanth will campaign in Viruthachalam Constitution, sources say
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X