சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"செம டென்ஷன்".. விஜயகாந்த் ஏன் அப்படி அறிவித்தார்.. இதுதான் காரணமா..? கொந்தளிக்கும் தேமுதிகவினர்

தேமுதிகவினர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: விஜயகாந்த் எடுத்த அந்த அறிவிப்பை கண்டு தேமுதிகவினர் அதிர்ந்து போயுள்ளனர்.. குழப்பத்திலும், அதிருப்தியிலும் மேலும் ஆளாகி உள்ளதாக தெரிகிறது.

சென்ற எம்பி தேர்தலை விட அதிக அளவுக்கு அசிங்கப்பட்டுவிட்டது தேமுதிக.. கடந்த முறையாவது கூட்டணியில் இருக்கட்டும், தொகுதிகளை குறைத்து தருவோம் என்ற அதிமுக நினைத்தது.. ஆனால், இந்த முறை அதுகூட இல்லை.

கூட்டணியே வேண்டாம் என்று நினைத்துவிட்ட ரீதியிலேயே இருந்தது.. பேச்சுவார்த்தைக்குகூட அழைக்கவில்லை.,.

 புலம்பல்

புலம்பல்

பிரேமலதா வாய்விட்டு பல முறை இதை சுட்டிக்காட்டும் அளவுக்கும், புலம்பும் அளவுக்கும் சென்றார்.. நடுநடுவே அதிமுக தலைமையை சீண்டும் விதத்திலும் நடந்து கொண்டார். அப்போதே கூட்டணி வேண்டாம், நாம தனியாக நிற்போம் என்று தேமுதிகவினர் புலம்ப தொடங்கினர்.

 கட்சி தலைமை

கட்சி தலைமை

இதனால், பிரதமர் சென்னை வந்தபோதுகூட, அந்த கூட்டத்தில் தேமுதிக கலந்து கொள்ளுமோ என்ற சந்தேகம் வந்தது.. ஆனால், அதிமுக அழைத்தால், கலந்து கொள்வோம் என்று தேமுதிக சொல்லவும்தான், அழைப்பு விடுக்கப்பட்டது.. ஆனால், கட்சி தலைமை யாருமே கலந்து கொள்ளவில்லை. இதுவும் தொண்டர்களுக்கு கொஞ்சம் அப்செட்தான்.

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

ஏனென்றால், மோடிக்கு விஜயகாந்த் என்றாலே ரொம்ப பிடிக்கும்.. அளவுகடந்த பாசம் வைத்திருப்பவர்.. இதுவரை விஜயகாந்த் என்ற மனிதருக்காகத்தான் அந்த கட்சியை விட்டுத்தராமல் பாஜக கூட்டணியில் இடம்பெற உதவி செய்து வருகிறது.. இந்த முறை மோடி வருகையில் தேமுதிக தரப்பில் யாருமே தென்படவில்லை.. இதனால் அதிமுக கூட்டணி மேலும் இழுபறிக்கு உள்ளாகி உள்ளதோ என்ற ஐயம் எழுந்தது.

 பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

நேற்றுதான், ஜெயக்குமார் வாயை திறந்து தேமுதிகவை பேச்சுவார்த்தைக்கு அழைப்போம் என்று சொல்லி உள்ளார்.. ஆனால், அதற்குள் விருப்ப மனு அளிக்கலாம் என்றுஅக்கட்சி அறிவித்துவிட்டது.. இதுதான் தற்போதைய தேமுதிகவினரின் அப்செட்டாக உருவெடுத்துள்ளது. காரணம், 41 சீட் கேட்டு அடம்பிடிக்கவேதான், பேச்சுவார்த்தையை அதிமுக ஆரம்பிக்காமல் இருந்தது.. அநேகமாக தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.. மிஞ்சி போனால் 15 தொகுதிகள் வரை கிடைக்கலாம் என தெரிகிறது.

அறிவிப்பு

அறிவிப்பு

2 தினங்களுக்கு முன்பு அதிமுக சார்பில் வெளியான ஒரு உத்தேச பட்டியலிலும் இது உறுதி செய்யப்பட்டிருந்தது.. மொத்தம் 14 தொகுதிகளை ஒதுக்கி, அந்த தொகுதிகள் என்னென்ன என்பது போன்ற லிஸ்ட்டும் வெளியானது.. இந்த தொகுதிகளில், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை நிறுத்தவே தேமுதிக விருப்ப மனு அளிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கட்சி தலைவர் விஜயகாந்த்தான் அதை வெளியிட்டு உள்ளார்.

 விருப்ப மனு

விருப்ப மனு

அதாவது வழக்கம்போல், விஜயகாந்த் பெயரில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.. 'தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள், 15 ஆயிரம் ரூபாயும், தனி தொகுதிக்கு, 10 ஆயிரம் ரூபாயும், புதுச்சேரி பொது தொகுதிக்கு, 10 ஆயிரம் ரூபாயும், தனித் தொகுதிக்கு, 5,000 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்..

 அதிருப்தி

அதிருப்தி

ஏனென்றால், அவர்கள் ஒதுக்குதே 10 அல்லது 15 தொகுதிகள்தான்.. அதற்கு எதுக்காக 234 தொகுதிகளிலும் பணம் வசூலிக்க வேண்டும்? தமிழ்நாட்டிலே இவ்வளவு தான் சீட் என்று தெரிஞ்சு போச்சு.. இதுல புதுச்சேரி எங்கிருந்து வந்தது? அங்கே எதுக்காக விருப்ப மனு? என்று கேட்கிறார்கள். விருப்ப மனு மூலம் பணம் வசூலிக்க ஆர்வம் காட்டுவதைவிட, சீட் பெறுவதில் மேலும் முனைப்பு காட்டியிருக்கலாமே என்று நொந்து கொள்கின்றனர் தேமுதிகவினர்.. இதையும் விஜயகாந்த் என்ற ஈரமனசுக்காகவே பொறுத்து கொள்ள வேண்டி இருக்கிறது!

English summary
VIjayakanths DMDK Statement and Cadres become upset
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X