சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓஹோ.. விஜயகாந்த் அதிரடிக்கு இதான் காரணமா.. "செம சிக்னல்".. அப்படியே மலைத்து பார்க்கும் திமுக, அதிமுக

விஜயகாந்த் இன்று மக்களை நேரில் சந்தித்தார்

Google Oneindia Tamil News

சென்னை: "நல்லா பாத்துக்கங்க.. கேப்டன் சூப்பரா இருக்காரு".. இது அதிமுகவுக்கு மட்டுமல்ல, தேமுதிகவுக்கும் கூட விஜயகாந்த் குறித்த ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்த பிரேமலதா விஜயகாந்த் கையில் எடுத்துள்ள உத்தியாக பார்க்கப்படுகிறது.

Recommended Video

    சென்னை: தனித்து நின்றால் கோட்டையில் தேமுதிக கொடி: கெத்து காட்டிய பிரேமலதா விஜயகாந்த்!

    சட்டசபைத் தேர்தலில் தங்களது இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டிய மிகப் பெரிய கட்டாயத்திலும் சிக்கலிலும் உள்ள ஒரு கட்சி எது என்றால் அது தேமுதிகதான். மற்ற கட்சிகளை விட இந்த கட்சிதான் மிகப் பெரிய சிக்கலில் இருக்கிறது.

    காரணம், விஜயகாந்த் இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை... திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தூக்கி ஓரத்தில் போட்டு விட்டன.. யாரும் வந்து கெஞ்சும் நிலையிலும் தேமுதிக இல்லை. கேட்டது கிடைக்குமா என்ற சந்தேகமும் உள்ளது.. தனித்துப் போட்டியிடும் அளவுக்கும் முன்பு போல தெம்பு இல்லை.

    தேமுதிக

    தேமுதிக

    இப்படி பல ரூபங்களிலும் தேமுதிகவுக்கு சவால்கள் அதிகம் உள்ளன. மறுபக்கம் ஒரு காலத்தில் போட்டியாக பார்க்கப்பட்ட பாமக, பல விதங்களிலும் தேமுதிகவை விட வலுவாகவே உள்ளது.. திமுகவும் சரி, அதிமுகவும் சரி விரும்பி அழைக்கும் கட்சியாக இன்னும் கூட இருக்கிறது.. அப்படியெல்லாம் இல்லை என்று சிலர் சொன்னாலும் கூட பாமகவை ஈஸியாக புறக்கணித்து விட முடியாத நிலையே இருக்கிறது என்பதே உண்மை.

     அழகு விஜயகாந்த்

    அழகு விஜயகாந்த்

    இந்த நிலையில்தான் விஜயகாந்த்தை வெளியில் கொண்டு வந்துள்ளார் பிரேமலதா. விஜயகாந்த்தும் முன்பை விட தெளிவாக காட்சி தருகிறார்... அழகாக இருக்கிறார்... அவரது அதே சிரிப்பையும் உதிர்த்துள்ளார். அதுவே தொண்டர்களுக்கு ஆயிரம் மடங்கு பலம் கொடுக்கக் கூடியதுதான்.. ஓரிரு வார்த்தைகளையும் பேசியுள்ளார். தமிழகம் முழுவதும் விஜயகாந்த்தை கூட்டிக் கொண்டு போகப் போவதாகவும் பிரேமலதா அறிவித்துள்ளார்.

    சிக்னல்கள்

    சிக்னல்கள்

    இந்த அறிவிப்பில் பல "சிக்னல்"கள் உள்ளன. முதலில் அதிமுகவுக்கு விஜயகாந்த் பலமாக இருக்கிறார், திடமாக இருக்கிறார், தேமுதிக தைரியமாக இருக்கிறது, மக்களை சந்திக்கத் தயாராகி விட்டது, எங்களை பயன்படுத்தாமல் விட்டு விடாதீங்க, கேட்ட சீட் கொடுங்க என்ற மறைமுக செய்தியை ஒரே ஒரு பிரச்சாரம் மூலம் பிரேமலதா அனுப்பியுள்ளதாக கருதப்படுகிறது.

     சீட் பேரம்

    சீட் பேரம்

    அதிமுகவிடம் கூட்டணிக்காகவும்,சீட்டுக்காகவும் ரொம்பவே மெனெக்கெட்டு வருகிறது தேமுதிக. ஆனால் அதிமுகவோ கிராக்கி பண்ணுகிறது. திமுக கண்டுக்கவே இல்லை. கதவையும் மூடி விட்டது. இந்த நிலையில் தேமுதிகவுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை விஜயகாந்த்தான். அதனால்தான் அவரை வேறு வழியில்லாமல் வெளியில் கொண்டு வந்துள்ளனர்.

    உற்சாகம்

    உற்சாகம்

    இன்னொரு சிக்னல் என்னவெனில், தேமுதிகவினருக்கே முதலில் தெம்பூட்ட வேண்டிய நிலையில் பிரேமலதா உள்ளார். அதனால்தான் விஜயகாந்த்தை வெளியில் கொண்டு வந்துள்ளார்.. விஜயகாந்த் சூப்பராக இருக்கிறார் என்ற செய்தியை இதன் மூலம் அவர் தேமுதிகவினரின் மனதில் புகட்டியுள்ளார்.. கேப்டன் உற்சாகமாக இருக்கிறார். உங்களைப் பார்க்க வரப் போகிறார். இது நம்ம தேர்தல்... அதிரடியாக வேலையைப் பாருங்கள் என்ற செய்தியை அவர் தொண்டர்களிடம் கொண்டு சென்றுள்ளார்.

     பிரேமலதா

    பிரேமலதா

    உண்மையிலேயே விஜயகாந்த்தை நீண்ட காலம் கழித்து இப்படிப் பிரச்சாரக் களத்தில் பார்ப்பதால் தொண்டர்களும் உற்சாகமாகியுள்ளனர். இதைத்தான் பிரேமலதா ரொம்பவே எதிர்பார்த்தார். அந்த வகையில் இது அவருக்கு வெற்றிதான். அடுத்தடுத்து இப்படி ஒவ்வொரு ஊராக விஜயகாந்த் அழைத்துச் செல்லப்பட்டால் நிச்சயம் தொண்டர்கள் உற்சாகம் அடைவார்கள். அதை விட முக்கியமாக, யாரும் விரக்தியில் கட்சி மாறிப் போய் விட மாட்டார்கள். இதுதான் பிரேமலதாவும் இப்போதைக்கு அதிகம் எதிர்பார்ப்பது.

     பலே பிளான்

    பலே பிளான்

    ரஜினி மன்றத்தினரை போல விரக்தியிலும், வேறு வழியில்லாமலும் யாரும் திமுக பக்கம் போய் விடக் கூடாது என்ற அச்சம் தேமுதிக தலைமையிடம் உள்ளது. அதை தடுக்கும் முகமாகவும் இப்படி விஜயகாந்ததை வெளியில் கொண்டு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. எது எப்படியோ, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்குமே விஜயகாந்த்தை வைத்து ஒரு வலுவான மெசேஜை அனுப்பி விட்டார் பிரேமலதா. இனியாவது கூட்டணி பேச்சுக்கள் களை கட்டுமா.. விரும்பியது கிடைக்குமா? என்பதை பார்க்க வேண்டும்.

    English summary
    Vijayakanths election Campaign and meets people
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X