• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"யூ டர்ன்".. அதிமுகவை பத்தி பேசாமல்.. ரூட்டை மாற்றிய விஜய பிரபாகரன்.. கவனிச்சீங்களா நீங்க?!

|

சென்னை: "முஸ்லிம்களுக்கும், எங்களுக்கும் எப்பவுமே ஒரு ஒற்றுமை உண்டு... சிறுபான்மை மக்களுக்கு கேப்டன் விஜயகாந்த் எப்போதும் நல்லதே செய்து கொண்டிருப்பார். அதனால் தான் என்னுடைய தம்பி பெயர் முதலில் சவுகத் அலி-ன்னு தான் வெச்சோம்.. உங்களுக்கு தெரியுமா, இப்பகூட நான் வீட்டில் இருந்தால் என் தம்பியை சவுகத்-ன்னுதான் கூப்பிடுவேன்" என்று விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

துவரங்குறிச்சி மற்றும் வையம்பட்டி பகுதி உட்பட பல்வேறு தொகுதிகளில் தேமுதிகவின் விஜயபிரபாகரன் பிரச்சாரம் செய்து வருகிறார்.. அப்போது அவர் சொன்னதாவது:

"நான் முதன் முதலில் அரசியலை தொடங்கிய இடம் தான் இந்த மணப்பாறை... முதல் சட்டமன்ற தேர்தலில் நான் பிரசாரம் செய்கின்றேன்... எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை எடுத்து அதிமுகவிடம் அருமையான கேள்வியை உதயநிதி ஸ்டாலின் கேட்கிறார்... நல்ல கேள்வி தான்.

உதயநிதி

உதயநிதி

ஆனால் உதயநிதி கச்சத்தீவில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து வரமுடியுமா? இதை நான் அவரை பார்த்து கேட்கிறேன்.. அவங்க மீது குறையை வைத்துக் கொண்டு அடுத்தவங்களை பற்றி கேள்வி கேட்கிறாங்க. இப்போது அமமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்... ஏனென்றால் அமமுகவில் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இருக்கிறார்கள். இந்த தேர்தலில் நம் கூட்டணி தான் மகத்தான வெற்றியை பெறும்.

 சவுகத் அலி

சவுகத் அலி

முஸ்லிம்களுக்கும், எங்களுக்கும் எப்பவுமே ஒரு ஒற்றுமை உண்டு... சிறுபான்மை மக்களுக்கு கேப்டன் விஜயகாந்த் எப்போதும் நல்லதே செய்து கொண்டிருப்பார். அதனால் தான் என்னுடைய தம்பி பெயர் முதலில் சவுகத் அலி-ன்னு தான் வெச்சோம்.. ஆனால் பாஸ்போட், உள்ளிட்ட பல தேவைகளுக்கான சண்முகபாண்டியன்-ன்னு மாத்தினோம்.. இப்பகூட நான் வீட்டில் இருந்தால் என் தம்பியை சவுகத்-ன்னுதான் கூப்பிடுவேன் என்றார் அதிமுகவுக்கு மாற்று திமுக என்பதை விட்டுவிட்டு தேமுதிகவுக்கு வாய்ப்பு கொடுங்கள்...

 உதயசூரியன்

உதயசூரியன்

இந்த தமிழக மக்களை தங்கத் தட்டில் வைத்து தாங்க வேண்டும் என்று விஜயகாந்த் சொலலி இருக்கிறார்.. அப்பாவோட கனவை நினைவாக்கதான் நான் இங்கு வந்திருக்கிறேன். நீங்கள் எல்லோரும் சிந்திக்கிறீங்க.. இல்லைன்னு சொல்லல.. ஆனா ஓட்டுபோடும்போது மட்டும் முரசு சின்னத்துக்கு ஓட்டுபோட கை வர மறுக்கிறது... அப்போது மட்டும் இலை, உதய சூரியனுக்கு தான் ஓட்டு போடுறீங்க.. 40 வருஷமாக மக்களுக்காக விஜயகாந்த் செய்த உழைப்பு எல்லாம் வீணாகிவிட்டது... எங்களுக்கு ஒரு வாய்ப்பை தாங்க.. மக்களுக்கு நல்லது செய்யனும்னு வெறியில் இருக்கோம்.." என்றார்.

 மாறுதல்கள்

மாறுதல்கள்

சமீப காலமாக விஜயபிரபாகரனின் பேச்சில் ஒருவித மாறுதல்கள் தென்பட்டு வருவதாக கூறப்படுகிறது.. முன்பை போல, அதிமுகவை அவ்வளவாக விமர்சிக்காமல் இருப்பதாக தெரிகிறது.. கூட்டணி வைக்க மறுத்து, அசிங்கப்படுத்தியது அதிமுக தான் என்று இவரே ஆரம்பத்தில் சொல்லிய நிலையில், தற்போதெல்லாம் அதிமுகவை அளவுக்கு அதிகமாக விமர்சிக்கவில்லை என்கிறார்கள்..

 சுமூகம்?

சுமூகம்?

அமமுக கூட்டணியில் உள்ள அதிமுக தொண்டர்களே உண்மையான அதிமுக தொண்டர்கள், ஏனென்றால் 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இருந்தபோது தேமுதிக, அதிமுக உறவு எவ்வளவு சுமூகமாக இருந்ததோ அதேநிலை இன்றும் உள்ளது" என்ற விஜயபிரபாகரனின் பேச்சு யோசிக்க வைக்கிறது.

பலம்

பலம்

திமுகஅதுமட்டுமல்ல.. டிடிவி எப்படி திமுகதான் குறி என்று சொல்லி வருகிறாரோ, அப்படியேதான் தேமுதிகவும் சொல்லி வருகிறது.. அதனால்தான், இன்று நேரடியாக உதயநிதிக்கு விஜயபிரகாரன் செக் வைத்து பேசுகிறார் என்றும் சொல்லப்படுகிறது.. ஒருவேளை தேர்தலுக்கு பிறகு அமமுக - அதிமுகவில் இணையுமோ? அப்படி இணையும் சூழல் வந்தால் தேமுதிகவும்தானே இணையும் என்பதில் மாற்று கருத்தில்லை.. எது எப்படியோ, கடந்த சில தினங்களாக நாகரீக வார்த்தைகளுடன் விஜயபிரபாகரன் பிரச்சாரம் செய்வது தேமுதிகவுக்கு ஓரளவு பலமும் ஆறுதலாகவும் இருந்து வருகிறது..!

English summary
Vijayakanths son Vijaya Prabhakaran questioned Udayanithi Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X