சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஏன் இந்த தம்பி, சம்பந்தமில்லாம இப்படி பேசணும்".. பிகில் வரும்வரை திகில்தான் போலயே!

தீபாவளிக்கு பிகில் படம் ரிலீஸ் ஆகுமா என தெரியவில்லை

Google Oneindia Tamil News

Recommended Video

    பிகிலுக்கு காத்திருக்கும் பிரச்சனை.. கடைசி நேரத்தில் என்ன ஆகுமோ!- வீடியோ

    சென்னை: "ஏன் இந்த தம்பி, இப்படி சம்பந்தமில்லாத விஷயங்களை எல்லாம் சினிமா விழாவில் பேசணும்.. அரசியல் ஏதாவது செய்யணும்னு நினைக்கிறாரா.." என்று விஜய்யின் பிகில் பட ஆடியோ ரிலீஸில் பேசியதை பற்றி எடப்பாடியார் கேட்டதாக கூறப்படுகிறது. அதனால், வழக்கம்போல விஜய்யின் இந்த படத்துக்கும் அரசின் முட்டுக்கட்டையும், எதிர்ப்பும் கிளம்புமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    உச்ச நடிகர் அந்தஸ்துக்கு விஜய் என்றைக்கோ வளர்ந்துவிட்டார். இருந்தாலும் மாஸ் ஹீரோ ஆக வேண்டும் என்றால் ஒரு சில ஃபார்மாலிட்டி சமாச்சாரங்களை சினிமாவுக்குள் புகுத்த வேண்டி உள்ளது. அதுதான் அரசியல் பஞ்ச்!

    தங்கள் படங்களில் அரசியல் டயலாக் பேசிவிட்டால், அவர் அரசுக்கு எதிரானவர் என்ற முத்திரை ரஜினி முதல் குத்தப்பட்டு வருகின்றன. ஒருவகையில் இது உண்மையும்கூட!

    எல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே!எல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே!

    எம்ஜிஆர்

    எம்ஜிஆர்

    அப்படித்தான் தலைவா படத்தில் விஜய் இந்த அரசியல் பஞ்சுக்கு பிள்ளையார் சுழி போட்டார். பெரும் பரபரப்பு பற்ற ஆரம்பித்தது. இத்தோடு விட்டிருந்தால்கூட பரவாயில்லை.. "எம்ஜிஆருக்கு இருந்த செல்வாக்கு என் பையன்கிட்டயும் இருக்கு. அறிஞர் அண்ணாவிடம் இருந்த அறிவு என்கிட்டயும் இருக்கு. அடுத்த முதல்வர் என் மகன்தான்" என்று எஸ்ஏ சந்திரசேகர் சொல்லவும் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பு தொடங்கியது.

    போயஸ் கார்டன்

    போயஸ் கார்டன்

    "டைம் டூ லீட்' என்கிற சப்-டைட்டிலை பார்த்ததுமே போயஸ் கார்டனில் டென்ஷன் எகிறிவிட்டது. இதற்கு பிறகு அப்பாவும், மகனும் ஓடிப்போய்.. தவமாய் தவமிருந்து.. காத்திருந்து.. ஒருவழியாக எக்ஸ்கியூஸ் கேட்டுவிட்டு.. அதன்பிறகுதான் நிலைமை சீராகி படம் வெளிவந்து ஓடியது.

    மெர்சல்

    மெர்சல்

    ஆனால், இப்போது யாரும் கேள்வி கேட்க முடியாது என்று நினைத்தோ என்னவோ, "காவலன்', மெர்சல்', "சர்கார்' என படங்களில் ஆளும்கட்சியின் மீதான கோப வெளிப்பாடு தென்பட்டது.. வழக்கம்போல இந்த படங்கள் வெளிவருவதில் சிக்கலை சந்தித்தன.. ஒருவழியாக படமும் ரிலீஸ் ஆகும். அதேபோலதான் பிகில் பட நிலைமையும் உள்ளது.

    எடப்பாடியார்

    எடப்பாடியார்

    ஆடியோ ரிலீஸில் செத்துபோன சுபஸ்ரீயை கொண்டு வந்து வைத்து பேசியதுடன், யாரை எங்கு உட்கார வைக்கணுமோ அங்கு அவரை உட்கார வைக்க வேண்டும்'' என எடப்பாடியாரை ஒரு இடி இடித்துவிட்டு போனார் விஜய். இப்பதான் பிரச்சனை ஆரம்பமானது.

    அரசியல் வாடை

    அரசியல் வாடை

    விஜய் என்னதான் அன்றைக்கு பேசினார் என்ற முழு பேச்சையும் முதல்வர் கேட்க.. உளவுத்துறையினர் அப்படியே அப்பட்டமாக மொத்தத்தையும் போட்டுக்காட்ட.."ஏன் இந்த தம்பி, இப்படி சம்பந்தமில்லாத விஷயங்களை எல்லாம் சினிமா விழாவில் பேசணும்.. அரசியல் ஏதாவது செய்யணும்னு நினைக்கிறாரா.." என்று முதல்வர் கோபப்பட்டதாகவும் தகவல் கசிந்தது.

    யோசனை

    யோசனை

    இதையடுத்து, விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் அரசு தரப்பிலிருந்து ஒருசில கண்டிஷன்கள் போயுள்ளதாம். மேலும் சென்சார் போர்டிலும் அரசின் தலையீடு நடந்தாக கூறப்படுகிறது. போனவாரம் தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் ஒரு ஆலோசனை கூட்டத்தையும் நடத்தி உள்ளனர். அப்போது, "கவர்ன்மென்ட்டை பகைத்துகொண்டு படத்தை ரிலீஸ் செய்யணுமா?" என்ற கேள்வி பொதுவாக எழுந்துள்ளது.

    திகில்தான்

    திகில்தான்

    அதனால் இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா.. தள்ளி போகுமா.. அல்லது எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து பேசி சுமூக முடிவுக்கு வருவார்களா.. என தெரியவில்லை. அதனால் பிகில் வெளியாகும் வரை படக்குழுவுக்கு திகில்தான்!

    English summary
    Actor Vijay had criticized the state of Tamil Nadu in Bigil audo launch function. There is doubt as to whether the film will be released on Diwali
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X