சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராத்திரி நேரத்தில்.. திடீரென தன்னை சந்தித்த விஜய்யிடம்.. ஹேப்பி பதிலை சொன்னாரா எடப்பாடியார்?

முதல்வரை விஜய் சந்தித்தது தொடர்பான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன

Google Oneindia Tamil News

சென்னை: நேற்றிரவு விஜய், தமிழக முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசியது தொடர்பாகவும், அப்போது அவர் வைத்த கோரிக்கைகள் தொடர்பாகவும் சோஷியல் மீடியாவில் பலவித கருத்துக்களும், விவாதங்களும் கிளம்பி உள்ளன.

பொங்கலுக்கு மாஸ்டர் படம் வெளியாக உள்ளது.. அதனால், முதல்வரை நேரடியாக சந்திக்க முடிவெடுத்து அவரிடம் விஜய் தரப்பிலிருந்து அப்பாய்ண்ட்மெண்ட் கேட்கப்பட்டிருந்தது.. ஆனால் முதல்வர் தரப்பிலிருந்து சரியாக பதில் இல்லை போலும்,

எனவே விஜய், தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் அமைச்சர் வேலுமணியை அணுகி, முதல்வரிடம் பேசுவதற்கு முயன்றுள்ளார்.. அதன்படியே, முதல்வரும் விஜய்யை சந்திக்க ஒப்புக் கொண்டுள்ளார்.. இந்த சந்திதப்பு ரகசியமாக இருக்கவும் முடிவாகி உள்ளது..

பேச்சு

பேச்சு

அப்படித்தான் நேற்றிரவும், முதல்வர் வீட்டிற்கு அமைச்சர் வேலுமணியோடு விஜய் வந்துள்ளார்.. அரை மணி நேரம் முதல்வரிடம் பேசியிருக்கிறார். தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு அனுமதியளித்த நிலையில், 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கேட்டு கோரிக்கையும் விடுத்துள்ளர்.

தியேட்டர்கள்

தியேட்டர்கள்

ஆனால், முதல்வர் - விஜய் சந்திப்பு பலவித விமர்சனங்களை தாங்கி வருகிறது.. 'கொரோனா பிரச்சனை இந்த 6 மாசமாக இருக்கிறது.. அதேபோல தியேட்டர்கள் திறப்பு தொடர்பாக இதுவரை எதுவும் பேசாமல் இருந்த விஜய், இப்போது தன்னுடைய படம் ரிலீஸாகிறது என்றதும், தன்னுடைய படத்தை ஓட வைப்பதற்காகவும், வசூலை எடுப்பதற்காகவும் முதல்வரை சந்தித்து பேசியிருக்கிறாரே, இது சரியா? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

50 சதவீத இருக்கை

50 சதவீத இருக்கை

மேலும், தியேட்டரில் கூட்டம் கூடினால் கொரோனா பரவும் என்றுதானே அரசு 50 சதவீத இருக்கைக்கு அனுமதியளித்திருக்கிறது.. இந்த நேரத்தில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கேட்டு போனால், ரசிகர்களுக்குதானே கொரோனா எளிதில் பரவும்? ரசிகர்களின் மீது அக்கறை இல்லாமல் வசூலை மட்டுமே விஜய் நோக்கமாக கொண்டுள்ளது சரியா? என்றும் சோஷியல் மீடியாவில் கேள்வி எழுந்தபடியே உள்ளது. அப்படின்னா, கொரோனா வந்து செத்தாலும் பரவாயில்லை, தியேட்டரில் கூட்டம் நிரம்பி வழியணுமா? என்று கேட்டு, #எடப்பாடிகாலில்விழுந்தவிஜய் என்ற ஹேஷ்டேககையும் ஒரு குரூப் வைரலாக்கி வருகின்றனர்.

ஓடிடி

ஓடிடி

அதேசமயம், விஜய்க்கு ஆதரவாக இன்னொரு குரூப் கிளம்பி உள்ளது.. ஏற்கனவே தியேட்டர்களை இழுத்து மூடி ஏகப்பட்டோர் நஷ்டத்தில் இருக்கிறார்கள்.. எத்தனையோ பேர், இன்றைய சூழலில் ஓடிடியில் படத்தை ரிலீஸ் செய்தபோதிலும், தன்னுடைய படம் தியேட்டரில் தான் வெளியாகும் என்று நம்பிக்கையை அளித்து வந்தவர் விஜய்.. அவர் நினைத்திருந்தால் ஓடிடியில் ஓட வைத்திருக்க முடியும்.

கிரீன் சிக்னல்

கிரீன் சிக்னல்

ஆனால், அவர் அப்படி செய்யவில்லை.. ஒட்டுமொத்த தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கையாகத்தான், விஜய் முதல்வரிடம் பேசியுள்ளார்.." என்கிறார்கள். இதனிடையே, விஜய் வைத்த கோரிக்கைக்கு எடப்பாடியார் ஓகே சொல்லி உள்ளதாக தெரிகிறது.. காரணம், தேர்தல் சமயம் என்பதால், கிரின் சிக்னல் தந்துவிடலாம் என்ற யோசனையில் இருக்கிறாராம் முதல்வர்!

English summary
Vijays secret visit to CM Edapadis house, and Criticisms have arisen in that
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X