• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வெள்ளிக்கிழமையை அதிர வைத்த விகாஸ் துபே.. விறுவிறு என்கவுன்டர்.. முழு ரவுண்டப்!

|

சென்னை: வெள்ளிக்கிழமையும் அதுவுமாக காலையிலேயே ரவுடி வேட்டையா என்று மக்கள் டென்ஷனாகி விட்டார்கள் இன்று. உபியை அதிர வைத்த விகாஸ் துபேயை உபி போலீஸார் இன்று வித்தியாசமான முறையில் என்கவுண்டர்செய்து வீழ்த்தியது நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தி விட்டது.

60 கேஸ்கள்.. அதுவும் பச்சைப் படுகொலைகள் உள்ளிட்ட பயங்கர வழக்குகள். ஆனாலும் இத்தனை காலம் ஜாலியாக உலா வந்து கொண்டுதான் இருந்தார். ஆனாலும் அவரை சுட்டுக் கொல்லவோ, பிடித்து உள்ளே போடவோ, கேஸ் நடத்தவோ, வழக்கு தொடுக்கவோ வாய்ப்பு அமையவே இல்லை..

vikas dubey police encounter a full round up

ஆனால் திடீர்னு பாருங்க.. 8 போலீஸாரை சுட்டுக் கொன்றார் துபே.. சட்டென்று மாறியது வானிலை.. மொத்த உ.பி காவல்துறையும் கோபமாகிப் போனது.. துபே வேட்டை தொடங்கியது. உஜ்ஜைனி வரை அது போனது.. கான்பூருக்கு அவரை இழுத்து வந்தது.. கொட்டும் மழைக்கு மத்தியில் திடீரென வேனும் கவிழ்ந்தது.. எஸ்கேப்பும் நடந்தது.. துப்பாக்கிச் சூடும் தொடர்ந்தது.. சிகிச்சை பலனின்றி விகாஸ் துபேவின் உயிரும் பிரிந்தது.

வெள்ளிக்கிழமை காலையில் விடிந்து எல்லோரும் அவரவர் வேலையில் அமர்ந்தபோது கிட்டத்தட்ட விகாஸ் துபே என்ற ரவுடியின் வாழ்க்கை முடிந்து போயிருந்தது.. இதுதொடர்பான இன்றைய செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக.. !

உ.பி. ரவுடி விகாஸ் துபே என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை-போலீசிடம் இருந்த தப்பியதால் துப்பாக்கிச் சூடு!

விகாஸ் துபே என்கவுண்ட்டர்... 1 மணிநேரம் செம 'படம்' காட்டிய உ.பி. போலீஸ்- பரபரக்க வைத்த நிமிடங்கள்

விகாஸ் துபே என்கவுண்ட்டர்- காரை கவிழ்த்து ரகசியங்களை பதுக்கிய உ.பி. யோகி அரசு: அகிலேஷ் சாடல்

ரவுடி துபே கதையை என்கவுண்ட்டரில் முடித்த தமிழர்- கான்பூர் எஸ்.பி. 'தீரன்' தினேஷ்குமார்-பரபர தகவல்!

போலீசிடம் இருந்து தப்பிக்க நினைச்ச ரவுடி விகாஸ் துபே நேற்று ஏன் சரண்டராகனும்? கேட்கிறது காங்.

"நான் கான்பூர்காரன்".. கதறிய ரவுடி.. கொட்டிய மழைக்கு நடுவே.. 60 கேஸ்களுக்கும் ஒரே நாளில் "தீர்ப்பு"

"போல் துபே பண்டிட்".. என்னாச்சு அந்த சண்டித்தனம்.. சரிந்த சாம்ராஜ்ஜியம்.. வேற லெவலில் வாழ்ந்த துபே

ஃபாலோ செய்த மீடியாக்கள்.. திடீரென தடுத்த போலீஸ்.. விகாஸ் துபே என்கவுண்டருக்கு முந்தைய பரபர வீடியோ

விகாஸ் துபே அளித்த "அந்த" வாக்குமூலம்.. கடுப்பான போலீஸ்.. என்கவுண்டருக்கு முன் என்ன நடந்தது? பின்னணி

வெளிவராத ரகசியங்கள்.. தப்பித்த தலைகள்.. "கேங்ஸ்டர்" விகாஸ் துபே என்கவுண்டரும் மறைக்கப்படும் மர்மமும்

அரசியல் தொடர்பு.. ஜாதி கொலை.. உ.பியின் "ராஜனாக" உருவெடுத்த விகாஸ் துபே.. புதுப்பேட்டை ஸ்டைல் வரலாறு!

கடைசியில் நடந்த மாற்றம்.. மாற்றப்பட்ட கார்.. விகாஸ் என்கவுண்டருக்கு முன் நடந்த ஷாக் சம்பவம்.. வீடியோ

60 கேஸ்களை சுமந்து நின்ற துபேவை என்கவுண்டர் செய்தது சரியா?.. இதுவரை காத்தவர்களுக்கு என்ன தண்டனை?

இந்தியாவில் இதுவரை போலீசார் நடத்திய என்கவுன்டர்களும்... மரணங்களும்!!

விகாஸ் துபே கொல்லப்படலாம்.. அப்பவே சந்தேகப்பட்ட வக்கீல்.. செய்து காட்டிய உ.பி.போலீஸ்!

கதவு மூடிருக்கு.. ரோடு நல்லாருக்கு.. விகாஸ் என்ன முட்டாளா.. வீடியோ போட்டு வெளுத்த போலீஸ் அதிகாரி

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
List of news stories of the police encounter of Gangster Vikas Dubey in Kanpur this morning.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X