சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விழுப்புரம் மாணவி மிருகத்தனமாக கொல்லப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைக்கிறது.. முதல்வர் கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: விழுப்புரம் சிறுமதுரையில் சிறுமி ஜெயஸ்ரீ மிருகத்தனமாக கொல்லப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைக்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி... தமிழகத்தையே உலுக்கிய மரணம்

    விழுப்புரம் மாவட்டத்தின் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி உயிரிரோடு.எரிக்கப்பட்டார். இதில் 95 சதவீதம் காயம் அடைந்த அச்சிறுமி தன்னை எரித்தவர்கள் யார் என்பது குறித்து மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    villupuram jayashree murder case: chief minister edappadi palanisamy condemns girl burnt and killed

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிமுகவினர் கலிய பெருமாள் மற்றும் முருகன் ஆகியோரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்துள்ளனர். இதையடுத்து சிறுமியை எரித்த வழக்கிர்ல சிக்கிய . அவர்கள் இருவரையும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்பிலும் இருந்தும் நீக்கி முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவிட்டுள்ளார்கள்.

    இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

    விழுப்புரம் சிறுமி கொலை.. தொடர்புடைய இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியது அதிமுக தலைமைவிழுப்புரம் சிறுமி கொலை.. தொடர்புடைய இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியது அதிமுக தலைமை

    இந்நிலையில் விழுப்புரம்: சிறுமதுரையில் சிறுமி ஜெயஸ்ரீ மிருகத்தனமாக கொல்லப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைக்கிறது. இக்கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் " விழுப்புரம் - சிறுமதுரையில் சிறுமி ஜெயஸ்ரீ மிருகத்தனமாக கொல்லப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைக்கிறது. இக்கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறேன். சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இச்செயலில் ஈடுபட்டுவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

    English summary
    villupuram jayashree murder case: tamilnadu chief minister edappadi palanisamy strongly condemns girl burnt and killed. Strict action will be taken against those involved in the act
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X