சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கட்டணம் கேட்ட ஊழியர்கள்.. ஆவேசமான டிரைவர்கள்.. நொறுக்கப்பட்ட பரணூர் டோல்கேட்.. ஒரு வாரம் ஃப்ரீ!

Google Oneindia Tamil News

Recommended Video

    அடித்து நொறுக்கப்பட்ட செங்கல்பட்டு சுங்கச்சாவடி.. ஒரு வாரத்திற்கு கட்டணமில்லை

    சென்னை : அரசு பேருந்துக்கு கட்டணம் கேட்டதால் அடித்து நொறுக்கப்பட்ட செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் ஒரு வாரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி செல்லும் எஸ்.ஈ.டி.சி (SETC) பேருந்து கடக்கும் போது சுங்கச்சாவடி ஊழியர் சுங்கக்கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது அப்போது அரசு பேருந்துக்கே கட்டணம் கேட்கிறாயா என ஊழியருக்கும் பேருந்து ஓட்டுனருக்கும் வாக்குவாதம் முற்றிப்போய் இருவருக்கும் கைகலப்பாகியது.

    ஓட்டுனரையும் நடத்துனரையும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியுள்ளனர் ஆத்திரமடைந்த ஓட்டுனர் பேருந்தை சுங்கச்சாவடி குறுக்கே பக்கவாட்டில் நிறுத்தியவுடன் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    முடிந்ததை செய்துவிட்டோம்.. கட்டுப்படுத்த முடியவில்லை.. கொரோனோவிற்கு எதிராக கைவிரித்த சீன அதிபர்! முடிந்ததை செய்துவிட்டோம்.. கட்டுப்படுத்த முடியவில்லை.. கொரோனோவிற்கு எதிராக கைவிரித்த சீன அதிபர்!

    அடித்து நொறுக்கினர்

    அடித்து நொறுக்கினர்

    நெரிசலில் நின்றிருந்த பல பேருந்தில் இருந்து கீழே இறங்கிய பயணிகள் அனைவரும் டோல்கேட் பூத்துகள், சிசிடிவி, ஊழியர்களின் இருசக்கர வாகனங்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கினர். கலவரம் முற்றியதால் அந்த இடமே போர்க்களம் ஆனது. தகவலறிந்து செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன் தலைமையில் சுற்றுவட்டார காவல்நிலையத்தில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசாரை வரவழைக்கப்பட்டு கலவரக்காரர்களை அப்பறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

    நள்ளிரவில் பதற்றம்

    நள்ளிரவில் பதற்றம்

    அரசு ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் கலவரக்காரர்களில் ஒருசிலரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவத்தால் பரனூர் சுங்கச்சாவடியில் நள்ளிரவில் பெரும் பரபபரபப்பாக காணப்பட்டது.

    வடமாநிலத்தவர்கள்

    வடமாநிலத்தவர்கள்

    அடிக்கடி பரனூர் சுங்கச்சாவடியில் இதுபோன்ற அடிதடி சம்பவங்கள் நடந்து வருவதற்கு காரணம் சுங்கச்சாவடியில் பணிபுரிபவர்களில் பெரும்பாலோனோர் வடமாநிலத்தவர்கள் என்றும் இரவு நேரங்களில் மதுபோதையில் இருப்பதால் சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளிடம் தரைகுறைவாக பேசுவதால் இபோன்ற சம்பவங்கள் நடப்பதாக ஒட்டு மொத்த வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.

    கட்டணமில்லை

    கட்டணமில்லை

    ஆனால் இந்த குற்றச்சாட்டை சுங்கக்சவாடி ஊழியர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதனிடையே அடித்து நொறுக்கப்பட்ட செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை சீர்செய்ய ஒரு வார காலம் ஆகும் என்றும் எனவே ஒரு வார காலத்திற்கு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    English summary
    vehicles allowed freely next one week at chengalpattu paranur toll plaza
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X