சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இங்க பாரு.. நேத்து ராத்திரி வந்த மாதிரி வரேன்.. பகல்ல வர மாட்டேன்.. புரியுதா.. வைரலாகும் ஆடியோ!

செல்போன் திருடனின் ஆடியோ பேச்சு வைரலாகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    வைரல் ஆடியோ..செல்போனை பறிகொடுத்தவரிடம் பொறுமையாக டீல் பேசிய திருடன்

    சென்னை: "நேத்து ராத்திரி வர்ற மாதிரி வரேன்.. பகல்ல வர மாட்டேன்.. புரியுதா" என்ற ஆடியோ வைரலாகி வருகிறது.

    எந்த ஊர், என்ன பேர் என்று எதுவுமே தெரியவில்லை. வீட்டிற்குள் நுழைந்த திருடன், அங்கிருந்த செல்போன், மற்றும் 16 ஆயிரம் ரூபாயை திருடி கொண்டு வந்துவிட்டார்.

    அந்த திருடனுக்கு பணத்தையும், செல்போனையும் பறிகொடுத்த உரிமையாளர் போன் செய்து பேசுகிறார். திருடனும் - வீட்டின் ஓனரும் பேசும் இந்தஆடியோ இப்போது வைரலாகி வருகிறது.

    viral audio about thief bargains with the owner

    திருடன்: நான் கன்பார்ம்மா தரேன்.. நீ யாரு பேசறது.. அதை சொல்லு

    உரிமையாளர்: நீங்க இப்ப எடுத்துக்கொண்டு போனீங்க இல்லை.. அது எங்க அக்காவோட போன் தான்.

    திருடன்: அப்படியா? சரி.. அதை நான் கன்பார்ம்மா குடுக்குறேன். ஆனா நீங்க 6 ஆயிரம் பணம் குடுத்துருங்க?

    உரிமையாளர்: குடுக்குறேண்ணா. நான் எங்க வந்து தரணும்னு சொல்லுங்க?

    திருடன்: சரி.. இன்னைக்கு எடத்த சொல்றேன் நானு.. சரியா? அதே மாதிரி பகல்ல முடியாது. நேத்து இரவுல வந்தேன்ல.. அதே மாதிரி நைட்லதான் வருவேன். ஒரு இடத்துக்கு வந்து நான் போன் பண்ணுவேன். அந்த எடத்த சொல்லுவேன். சொன்னதும் நீங்க அங்கே வந்துரணும். ஓகேவா..

    உரிமையாளர்: சரிண்ணா.. இந்த நம்பருக்கே பண்றீங்களா? ஏன்னா, எங்க அக்கா பால்வாடியில வேலை செய்றாங்க. அது கவர்மெண்ட் செல்போனு. அதான் கேக்குறேன். அதுக்கு கணக்குலாம் குடுக்கணும்.

    திருடன்: ஓ.. கவர்மெண்ட் செல்லுன்னா என்ன? பால்வாடியில வேலை செய்றாங்களே.. அங்க தந்ததா.. சரி.. சரி... நான் கன்பார்ம்மா தரேன்..ய்யா.. நான் ஏமாத்தல்லாம் மாட்டேன். புரியுதா.. எனக்கு தேவை பணம்.. குடுத்துடுறியா?

    உரிமையாளர்: ஆமாண்ணா.. பணம் குடுத்துடுறேங்க.. சரி, இங்க வந்தப்போ காசு எதுனா எடுத்துக்கிட்டீங்களா?

    திருடன்: ஆமா, எடுத்துக்கிட்டேன். 16 ஆயிரம் இருந்தது. அவ்ளோதான்.

    உரிமையாளர்: 16 ஆயிரமா?

    திருடன்: ஆமா, அவ்ளோதான் இருந்தது. அங்கே ரொம்ப அதிகமாக இல்லை.

    உரிமையாளர்: ஏன்.ண்ணா.. அதான் செல்லு எடுத்துட்டு போனீங்களே? அப்படின்னா காசு வெச்சிருந்துருக்கலாம்ல.. இல்ல காசு எடுத்துட்டு போனீங்களே.. செல்லு வெச்சுட்டு போயிருக்கலாம்ல?

    திருடன்: ஆமாமா.. என் மைண்ட்ல ஏறல.. நெனைச்சேன்..ய்யா. அப்படியே ரெண்டுத்தையும் வந்துட்டேன்

    உரிமையாளர்: ஒரே வீட்ல இவ்ளோ ஆட்டய போடலாமா? உனக்கு ஒரு மனசாட்சி இல்லயா?

    திருடன்: (சிரிப்பு) உண்மைதான். ஒரு இடத்துல பணம் கேட்டிருந்தேன். குடுத்துடுறேன்ப்பா.. 7 ரூபாய் செல்லுக்கு பேசினேன்.. 5 ஆயிரம் குடுத்துடு வந்து.. நைட்டுக்கு உனக்கு டைம் இருக்கு இல்லே.. 5 ஆயிரம் புரட்டி கொண்டுவந்து குடுத்துட்டு, உன் செல்லு வாங்கிட்டு போ" என்று நீள்கிறது அந்த செல்போன் ஆடியோ!

    இதில் ஹைலைட் என்னவென்றால், "எப்ப வேண்டுமானாலும் நீ எனக்கு போன் பண்ணு.. நான் பேசுவேன்.. தெரியுதா" என்று டச்சிங்காக திருடன் பேசுவதுதான்!

    English summary
    thief bargains with the cellphone owner who he stole from him and this audio goes viral on socials now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X