சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது வேற லெவல்.. "தமிழகத்தின் ஜான்சி ராணி.. சிங்க பெண்" பாராட்டுக்களை வாரி குவித்த சசிகலா புஷ்பா

Google Oneindia Tamil News

சென்னை: "தமிழகத்தின் ஜான்சி ராணி... சிங்க பெண்" என்று புகழ்ந்து தள்ளி பாஜகவினர் சசிகலா புஷ்பாவுக்கு போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர்... இந்த போஸ்டர்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது!

அதிமுகவின் மாநிலங்களவை எம்பியாக இருந்தவர் சசிகலா புஷ்பா.. ஆனால் கடந்த வருடத்தில் இருந்து பாஜகவுக்கு ஆதரவாகவே தனது கருத்துக்களை பேசி வந்தார்.. குறிப்பாக பிரதமர் மோடியை ஓவராகவே புகழ்ந்து பேட்டிக்களை தந்தார்.

இதனால் அவர் பாஜகவில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாயின.. அதன்படி சில தினங்களுக்கு முன்பு சசிகலா புஷ்பா முரளிதரராவ், பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையிலும் பாஜகவில் ஐக்கியமானார்.

சசிகலா புஷ்பா வருகையும்... தமிழக பாஜக நிர்வாகிகள் அதிருப்தியும் சசிகலா புஷ்பா வருகையும்... தமிழக பாஜக நிர்வாகிகள் அதிருப்தியும்

சசிகலா புஷ்பா

சசிகலா புஷ்பா

இப்போது சட்டசபை தேர்தல் மும்முரங்களில் எல்லா கட்சிகளும் இறங்கி உள்ள நிலையில், சசிகலா புஷ்பாவையும் பாஜக வாக்கு வங்கியை பலப்படுத்தும் முயற்சியில் இறக்கி உள்ளதாக தகவல்கள் வந்தன.. குறிப்பாக அதிமுகவில் உள்ள சாதிய வாக்குகளை வளைத்து போடும் அசைன்மென்ட்டை பாஜக தரப்பு ஒதுக்கியதாகவும் கூறப்பட்டது.

ராஜ்ய சபா

ராஜ்ய சபா

இந்நிலையில், அப்போது கட்சியில் சேர்ந்த சசிகலா புஷ்பாவுக்கு இப்போது தமிழக பாஜகவினர் போஸ்டர் ஒட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சசிகலா புஷ்பாவுக்கும் போஸ்டர்களுக்கும் நிறைய நெருக்கம் உள்ளது.. கடந்த 2016-ல் "அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு 'வீரமங்கை', 'பொய்வழக்கை முறியடிக்க புறப்பட்ட புயல்' என்ற பட்டங்களுடன் நாடார் சமுதாயம் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

எதிர்ப்பு

எதிர்ப்பு

அதேபோல ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த சிகிச்சை பெற்ற சமயம், இந்நிலைக்கு காரணம் சசிகலாதான் என்றும் ஒரு பேட்டியை தந்திருந்தார்.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.. "கழகத்தை பாதுகாக்க எங்களுக்குத் தெரியும் நீ யார்? நாவை அடக்கு இல்லை..." என்றும் ‘பெண் இனத்தின் அவமானச் சின்னம்' என்றும் ஒட்டப்பட்டன.

புகழ்ச்சி

புகழ்ச்சி

ஆனால் இன்று சசிகலாவை பாராட்டி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், "தமிழகத்தின் ஜான்சி ராணி, சிங்க பெண்' என்று புகழ்ந்து தள்ளி உள்ளனர்.. "மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமை ஏற்று பாஜகவில் இணைந்த தமிழகத்தின் ஜான்சிராணி சிங்கப்பெண் டாக்டர். சசிகலாபுஷ்பா ராமசுவாமி எம்பி அவர்களை வருக.. வருக என அன்புடன் வரவேற்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடி - அமித்ஷா

மோடி - அமித்ஷா

கையில் பூங்கொத்துடன் சசிகலா புஷ்பா படம் பாதி போஸ்டரை அடைத்து கொண்டுள்ளது.. பக்கத்திலேயே பிரதமர் மோடி, அமித்ஷா, போட்டோக்களும் சிறிய அளவில் உள்ளன. இதே பாஜகவினர்தான் அன்று சசிகலா புஷ்பாவை திட்டியிருந்தனர்.. இப்போது மானாவாரியாக புகழ்ந்தும், பாராட்டியும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

English summary
bjp mp sasikala pushpas poster becomes viral on socials now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X