சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முத்தங்களும், கட்டிப்பிடிகளும்.. கூடவே நிறைய நிறைய அன்பும்... இவளன்றோ தேவதை.. வைரலாகும் வீடியோ

பொருத்தப்பட்ட செயற்கை காலை பள்ளி தோழிகளிடம் காட்டி மகிழ்கிறாள் அனு.

Google Oneindia Tamil News

Recommended Video

    தனக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டதை தோழிகளிடம் மகிழ்ச்சியுடன் காட்டும் சிறுமி -வீடியோ

    சென்னை: அது ஒரு மழலை பள்ளிக்கூடம்! மைதானத்தில் குழந்தைகள் துள்ளி விளையாடி கொண்டிருக்கிறார்கள்! அங்குதான் அனுவும் விளையாட வந்தாள். அவளை பற்றின வீடியோ ஒன்றுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சம்பவம் பிரிட்டனில் நடந்துள்ளது. மழலை பள்ளி ஒன்றின் மைதானத்தில் பெண் குழந்தைகள் விளையாடி கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்குமே 7, 8 வயசுதான் இருக்கும். அப்போதுதான் அனு அங்கே வருகிறாள். அனுவுக்கு வயசு 7தான்! அந்த பள்ளியில்தான் படிக்கிறாள். பிறந்த கொஞ்ச காலத்திலேயே அனுவுக்கு கால் துண்டாகிப் போனது. அதனால்தான் செயற்கைக் கால் பொருத்தப்பட்டுள்ளது.

    லோக்சபா தேர்தல்: அனல் பறக்கும் ராஜீவ் மீதான புகார்கள்... எல்லாமே 'வாக்கு வங்கி' அரசியல்?லோக்சபா தேர்தல்: அனல் பறக்கும் ராஜீவ் மீதான புகார்கள்... எல்லாமே 'வாக்கு வங்கி' அரசியல்?

    சிகிச்சை

    சிகிச்சை

    காலில் அவளுக்கு ஆபரேஷன் நடந்துள்ளது. அதற்காக செயற்கை கால் பொருத்தப்பட்டு,சிகிச்சை முடிந்து மீண்டும் பள்ளிக்கு வருகிறாள். எல்லோரும் ரொம்ப நாள் கழித்து அனுவை பார்க்கிறார்கள். பழைய கால் போய், புதிய செயற்கை கால் பொருத்தி வந்த அனுவை சூழ்ந்து கொள்கின்றனர் தோழிகள்.

    புது கால்?

    புது கால்?

    எந்த வித்தியாசமும் அவளிடம் காட்டவில்லை, இறுக்கி கட்டிக் கொள்கிறார்கள். கன்னத்தில் முத்தங்களை பதிக்கிறார்கள். "இதுதான் உன்னுடைய புது காலா" என்று கேட்டபடியே அழுத்தி முத்தம் தருகிறாள்.

    முத்தங்கள்

    முத்தங்கள்

    முத்தங்களும், கட்டிப்பிடிகளும் ஆறுதலை அனுவுக்கு தந்திருக்கும் என்று நினைத்தால் அதுதான் தப்பு! அனு தோழிகளின் அன்பை மறுக்காமல் வாங்கி கொள்கிறாள். ஆனால் அடுத்த வினாடியே துள்ளி துள்ளி ஓடுகிறாள். தன் மேல் விழும் பரிதாப பார்வையை அனு விரும்பவில்லை போலும்!

    கனிமொழி ட்வீட்

    2017-ல் பிபிசி செய்தி நிறுவனம் இதனை வீடியோவாக படமாக்கியது. இந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை திமுக எம்பி கனிமொழி ஷேர் செய்துள்ளார். தனது ட்வீட்டில் "பெரியவர்களும், அரசாங்கங்களும் இவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார். இதனால் வீடியோவை நிறைய பேர் ஷேர் செய்து வருகிறார்கள்.

    English summary
    In Britain, School Girl Anu showing off her new prosthetic blade to friends
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X