சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னை போட்டு சாகடிக்கறாங்கம்மா.. எங்கம்மா இருக்கே.. பதறல் வீடியோ.. குவியும் கண்டனங்கள்!

சிறுவனை கடத்தியது போல் நடித்தவர் விளக்கம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    என்னை போட்டு சாகடிக்கறாங்கம்மா! பதறல் வீடியோ, குவியும் கண்டனங்கள்! -வீடியோ

    சென்னை: "ம்மா.. என்னை போட்டு சாகடிக்கறாங்கம்மா.. எங்கம்மா இருக்கே.. என்னை வந்து காப்பாத்தும்மா" என்று கதறும் சிறுவனின் வீடியோ படுவேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியதோடு, கடும் கண்டனங்களையும் குவித்து விட்டது.

    டிக்டாக் ஆப்பில் எத்தனையோ பேர் தங்கள் திறமைகளை காட்டி வருகிறார்கள். இதில் எத்தனையோ திறமை மிக்க வீடியோக்கள் இருந்தாலும் ஒருசில பகீர் வீடியோக்களால் மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் கடந்த 2 நாட்களாக வைரலாகி வருகிறது.

    ஒரு சிறுவனை ஊருக்கு ஒதுக்குபுறமாக இளைஞர்கள் சிலர் தூக்கி வந்துவிடுகிறார்கள். அவனை கடத்த போவதாகவும், யாருக்கும் தெரியாமல் சீக்கிரமா காரை எடுத்து கொண்டு வருமாறும் அந்த இளைஞர் நண்பர்களிடம் போனில் சொல்கிறார்.

    இளைஞர்கள்

    இளைஞர்கள்

    இதைக்கேட்டு பதறிய சிறுவன், "ஐயோ.. நான் என்ன பண்ண போறேன்.. அம்மா வாங்கம்மா.. எங்கம்மா இருக்கீங்க.. என்னை போட்டு சாகடிக்கிறாங்கம்மா" என்று கதறுகிறார். இதை கேட்டு இளைஞர் விழுந்து விழுந்து சிரிக்கிறார். ஒரு கட்டத்தில் சிறுவன், "எவ்வளவு காசு வேணும்னாலும் தரேன், என்னை விட்டுடுங்க" என்று கையெடுத்து கும்பிட்டு கெஞ்சுகிறான்"

    படு வைரல்

    படு வைரல்

    இறுதியில் அங்கு வந்த ஒருவரிடம் சிறுவனை ஒப்படைக்கிறார் இளைஞர். இந்த வீடியோ கடந்த 2 நாட்களாக படுவைரலாகி எல்லாருடைய வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொண்டது. பேஸ்புக், ட்விட்டரிலும் ஷேர் ஆனது. சிறுவனை கொடுமைப்படுத்திய இளைஞர் மீது நடவடிக்கை வேண்டும் என்று பல தரப்பிலும் கண்டனங்கள் எழ ஆரம்பித்தன.

    மச்சான் சக்திவேல்

    மச்சான் சக்திவேல்

    ஆனால் இதை பற்றி சம்பந்தப்பட்ட இளைஞர் இன்னொரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "இவன் என் அக்கா மகன்தான், மச்சான் சக்திவேல். இதோ இதுதான் என் அக்கா. நானும் இவனும் இந்த மாதிரி நிறைய வீடியோ பண்ணியிருக்கோம். இப்பதான் முதல்முறையா டிக்டாக் ஆப்பில் போடலாமேன்னு போட்டோம். யாரும் தப்பா நினைச்சிக்காதீங்க. ஜாலியாதான் போட்டோம்" என்று அந்த சிறுவனுடன் இணைந்து விளக்கம் தெரிவித்துள்ளார்.

    நீதிமன்றம்

    நீதிமன்றம்

    லைக்குகள், கமெண்ட்களை வாங்க ஒரு விவஸ்தை வேணாமா? இப்படிப்பட்ட அத்துமீறல், பகீர், நிறைந்த வீடியோக்கள் ஷேர் செய்யப்படுவதால்தான், கோர்ட் இந்த விஷயத்தில் தலையிட்டு டிக்டாப் ஆப்பை தடை செய்ய முயன்றது.

    வலுக்கும் குரல்

    வலுக்கும் குரல்

    ஆனால் அதற்கும் எதிர்ப்பு குரல்கள் வலுத்து, கடைசியில் டிக்டாக் ஆப்பிற்கு கோர்ட் அனுமதி தரும் நிலை ஏற்பட்டு விட்டது. தேங்கி நிற்கும் பிரச்சனைகள், வழக்குகள், இருக்கிற வேலையெல்லாம் விட்டுவிட்டு கோர்ட் எதற்காக இந்த விஷயத்தை கையில் எடுத்தது என்பது இப்போது நன்றாகவே புரிந்திருக்கும்.

    English summary
    Young man has released another video and explain about his kidnap Tik tok Video
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X