சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அம்மாவுக்கு திவசம்.. ஆளுக்கொரு பிரியாணியும், குவார்ட்டரும்.. மகன் செய்த அடடே தானம்

தாயின் நினைவு நாளுக்கு மகன் மது பாட்டில் தந்திருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தாயின் நினைவு தினத்துக்கு குவார்ட்டர், கோழி பிரியாணி தானம் செய்த மகன்-வீடியோ

    சென்னை: தாயின் நினைவு தினத்துக்கு இந்த மகன் செய்த தானம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பொதுவாக தாய், தகப்பன் யாராவது இறந்துவிட்டால் அவர்களது நினைவு நாளில் அன்னதானம், உள்ளிட்ட பல நல்ல காரியங்களை செய்வார்கள்.

    ஆனால் இங்கு ஒரு மகன் பெற்ற தாயின் நினைவு நாளை வித்தியாசமாக அனுசரித்துள்ளார். இது வீடியோவாக வெளிவந்துள்ளது.

    மாலைகள்

    மாலைகள்

    எந்த ஊர், இவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. வீட்டிற்குள் இந்த சம்பவம் நடக்கிறது. தாயின் போட்டோ சுவற்றில் மாட்டப்பட்டுள்ளது. அதற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டுள்ளது. பிறகு ஒரு டேபிள் போடப்பட்டு, அதன் அருகில் இறந்த தாயின் மகன் நின்று கொண்டிருக்கிறார்.

    குவார்ட்டர்

    குவார்ட்டர்

    அந்த டேபிள் முழுக்க கோழி பிரியாணி பொட்டலங்கள் அடுக்கப்பட்டுள்ளது. பக்கத்தில் குவார்ட்டர் பாட்டில்கள் அதேபோல் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த மகன் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கோழி பிரியாணியும், குவார்ட்டரும் தருகிறார்.

    தாயின் நினைவு நாள்

    தாயின் நினைவு நாள்

    ஒவ்வொரு ஊழியரின் பெயர்களை கூப்பிட, கூப்பிட அவர்களும் வந்து இவற்றை பெற்று கொண்டு போகிறார்கள். தாயின் நினைவு நாளுக்கு பிரியாணியைகூட ஒருவிதத்தில் சேர்த்து கொள்ளலாம் சரி, ஆனால் குவார்ட்டரை எப்படி சேர்ப்பது என்று தெரியவில்லை.

    குவார்ட்டர் எதற்கு?

    குவார்ட்டர் எதற்கு?

    இந்த மகன் எதற்காக எல்லாருக்கும் குவார்ட்டரை தந்தார் என்றும் புரியவில்லை. இதை ஒருவர் செல்போனில் படம் பிடித்து இணையத்தில் பதிவிட, மூக்கை துளைத்து கொண்டு இந்த வீடியோ பரவி வருகிறது.

    English summary
    Son gives Liquor and Biryani to public for his mother's Memorable day. This Video goes Viral
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X