• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

மேக்ஸ்வெலிடம் ஸ்பெஷல் டேலண்ட் இருக்குங்க.. இந்த முறை அதை பார்ப்பீங்க.. கிங் கோலி கான்ஃபிடன்ஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: இந்த முறை மேக்ஸ்வெலிடம் ஒரு வித்தியாசமான ஆற்றலைக் காண்பதாக பெங்களூரு அணியின் கேப்டன் கோலி கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் 14-வது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா இன்று முதல் களைகட்டப் போகிறது.

போட்டிகளை நேரடியாக பார்க்க அனுமதி இல்லை என்ற போதிலும், தங்கள் மனம் கவர்ந்த வீரர்களின் ஆட்டத்தை டி.வி.யில் பார்த்து ரசிக்க ரசிகர்கள் ரெடியாகி விட்டனர்.

கோலி-சர்மா மோதல்

கோலி-சர்மா மோதல்

இன்றைய முதல் ஆட்டத்தில், கோப்பை மேல் கோப்பையாக வாங்கி குவிக்கும் ரோகித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணியும், ''இந்த முறையாவது கோப்பையை வாங்க விடுங்கடா'' என்ற விரக்தி மோடில் இருக்கும் விராட் கோலியின் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்திய அணிக்காக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற முரட்டு அணிகளை எளிதில் சாய்த்து கோப்பையை வாங்கி கொடுக்கும் விராட் கோலியால், ஐ.பி.எல் கோப்பை மட்டும் ஏனோ எட்டாக்கனியாக உள்ளது.

புது ரத்தம் பாய்ச்சிய பெங்களூரு

புது ரத்தம் பாய்ச்சிய பெங்களூரு

இந்த முறை இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று நினைத்த பெங்களூரு அணி, முக்கிய வீரர்களான 360 டி.வில்லியர்ஸ், அதிரடி சூரர் தேவ்தத் படிக்கல், கேப்டன் கோலி, சுழற்பந்து சூறாவளி சாஹல் ஆகியோரை தவிர மற்ற வீரர்களை வெளியே தூக்கி வீசியது. அணிக்கு புதுரத்தம் பாய்ச்சும் வகையில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கைல் ஜாமிசனை ரூ.15 கோடிக்கு விலைக்கு வாங்கியது.

 மேக்ஸ்வெல் ஏன்?

மேக்ஸ்வெல் ஏன்?

இதேபோல் ஆஸ்திரேலியா அதிரடி மன்னன் மேக்ஸ்வெல்-ஐ ரூ.14 கோடிக்கு மேல் வாங்கியது கண்டு பெங்களூரு ரசிகர்களுக்கு மாரடைப்பே வந்து விட்டது என கூறலாம்.. கடந்த சீசனில் 11 இன்னிங்ஸ்களில் மிக சோசமான15.42 என்ற சராசரியில், 101.88 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்த மேக்ஸ்வெல்-ஐ பெங்களூரு வாங்கியதை பார்த்து மற்ற அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.

வித்தியாசமான ஆற்றல் உள்ளது

வித்தியாசமான ஆற்றல் உள்ளது

ஒரு பவுலரை விட மோசமாக பேட்டிங் செய்த மேக்ஸ்வெலை எடுத்தது ஏன்? என பெங்களூரு ரசிகர்கள் டுவிட்டரில் புலம்பி தீர்த்தனர். இந்த நிலையில் மோசமான பார்ம்மில் உள்ள மேக்ஸ்வெல்-ஐ வாங்கியது ஏன்? என்பதற்கு விராட் கோலி மனம் திறந்துள்ளார். ஆர்.சி.பி.யின் டேனிஷ் தளத்தில் கூறிய கோலி, '' மேக்ஸி(மேக்ஸ்வெல்) ஒரு நல்ல பையன். நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு விளையாட சென்றிருந்தபோது ஆர்.சி.பி.யில் அங்கம் வகிக்க வேண்டும் என்று மேக்ஸ்வெல் ஆசைப்பட்டார். இந்த முறை மேக்ஸ்வெலிடம் ஒரு வித்தியாசமான ஆற்றலைக் காண்கிறேன்'' என்று கோலி கூறினார்.

சிறந்த பங்களிப்பு வேண்டும்

சிறந்த பங்களிப்பு வேண்டும்

தொடர்ந்து பேசிய கோலி, '' நாங்கள் மேக்ஸியை ஏற்கனவே விரும்பினோம்,. குறிப்பாக பிப்ரவரி மாதம் நடந்த ஏலத்தில் அவரை குறிவைத்தோம். எங்கள் அணியில் ஒரு தனிப்பட்ட வீரர்(மேக்ஸ்வெல்) மைய புள்ளியாக இருக்க நாங்கள் விரும்பவில்லை. ஒருவருக்கொருவர் சிறந்த பங்களிப்பு அளிக்கக்கூடிய ஒரு சிறந்த அணியை நாங்கள் விரும்புகிறோம்'' என்றும் கோலி தெரிவித்தார்.

English summary
Bangalore captain Kohli has said that he sees a different energy in Maxwell this time
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X