சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விருதுநகர் அரசியலும்... விடாமல் தொடரும் "வாயாடி" சர்ச்சையும்...!

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுகவுக்கு ராஜேந்திர பாலாஜி சவால்..வீடியோ

    சென்னை: விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யை மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தைகளால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விமர்சித்தது அரசியலுக்கு அப்பாற்பட்டும் பொதுமக்களை முகம் சுளிக்கச்செய்துள்ளது.

    பண்ணிகுட்டி என்றும், ரப்பர் குண்டால் வயிற்றில் அடிக்க வேண்டும் எனவும் மாணிக்கம் தாகூர் எம்.பி.யை ஒருமையில் பேசியிருந்தார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. இது குறித்து விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜா சொக்கர், காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

    இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சு குறித்து செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர் எம்.பி., ராஜேந்திரபாலாஜி ஒரு மங்குனி என்றும், அவர் அளவுக்கு தன்னால் கீழிறங்கி பேசத் தெரியாது எனவும் கூறினார்.

    வா வா, மல்லுக்கு வா.. சண்டைக்கு வா.. மோதிப் போர்ப்போம்.. திமுகவுக்கு ராஜேந்திர பாலாஜி சவால்வா வா, மல்லுக்கு வா.. சண்டைக்கு வா.. மோதிப் போர்ப்போம்.. திமுகவுக்கு ராஜேந்திர பாலாஜி சவால்

    லோக்சபா சபாநாயகரிடம்

    லோக்சபா சபாநாயகரிடம்

    மேலும், இதனை அப்படியே தாம் விடப்போவதில்லை எனவும், நாடாளுமன்ற சபாநாயகரிடம் புகாராக எடுத்துச்சென்று நாடாளுமன்ற சிறப்புரிமை குழு மூலம் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறினார்.

    அமெரிக்காவில் என்ன நடந்துச்சோ

    அமெரிக்காவில் என்ன நடந்துச்சோ

    அமெரிக்காவில் என்ன நடந்ததோ தெரியவில்லை, அங்கிருந்து திரும்பியதில் இருந்து ஆள் ஒரு மாதிரி இருக்கிறார் எனக் கூறிய அவர், ராஜேந்திரபாலாஜியை செக்கப் செய்ய வேண்டும் எனகூறியுள்ளார். இதனிடையே இந்த விவகாரத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை முதலமைச்சரிடம் கொண்டு சென்று ராஜேந்திரபாலாஜிக்கு வாய்ப்பூட்டு போட வலியுறுத்தியுள்ளதாம்.

    வாயாடி அரசியல்

    வாயாடி அரசியல்

    விருதுநகர் மாவட்ட அரசியலையும், அதிரடியையும் பிரிக்க முடியாது போல் தெரிகிறது. இதே விருதுநகர் மாவட்ட அரசியலில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர் அதிமுகவின் தாமரைக்கனி. ஸ்ரீவில்லிப்புத்தூர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது சட்டப்பேரவையில் அவர் நடத்திய ஸ்டண்ட்களை வரலாறு என்றும் மறக்காது. பேரவைக்குள்ளே பாய்ந்து பாய்ந்து சண்டைக்கு சென்றவர் அவர்.

    மறக்க முடியாத இன்பத் தமிழன்

    மறக்க முடியாத இன்பத் தமிழன்

    அவர்காலத்துக்கு பிறகு ஜெயலலிதா அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சரானார் அவரது மகன் இன்பத்தமிழன். 2001-2006 காலகட்டத்தில் அவர் காட்டாத அதிரடிகள் இல்லை. அந்தளவுக்கு மாவட்டத்தில் அரசியல் செய்து கட்டுபாட்டில் வைத்திருந்தார். இன்று ராஜேந்திரபாலாஜியும் அதே பாணியை பின்பற்றத் தொடங்கியுள்ளார் போல் தெரிகிறது. ஒருவேளை தாமரைக்கனியை போல் தானும் வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டும் என நினைக்கிறாரோ என்னவோ அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

    English summary
    virudhunagar politics and controversey speeches for last two decades
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X