சித்ரா மரண வழக்கில் மாஜிக்களை இழுத்து விட்ட ஹேமந்த்.. ஆளை விடுப்பானு டீல் பேசும் மாஜி அமைச்சர்?
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் மாஜிக்களின் பெயரை வெளியிட போவதாக அறிவித்துள்ள ஹேமந்திடம் மாஜி அமைச்சர் ஒருவர் டீலிங் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்தில் நிறைய கேள்விகள் எழுந்துள்ளன.
6 மாத மகப்பேறு விடுப்பு! சுகாதர ஊழியர்களுக்கு மேலும் பல சர்ப்ரைஸ்! அமைச்சர் மா.சுவின் மாஸ் அறிவிப்பு
சித்ராவின் தாயும் அவரது தோழி ரேகா நாயரும் ஹேமந்த் மீது சந்தேகத்தை திருப்பியுள்ளனர். மேலும் தன் மகளை கடைசியாக அழைத்து சென்றது ஹேமந்த்துதான், அதனால் சித்ராவின் மரணத்திற்கு அவர்தான் பொறுப்பு என தாய் அடித்துக் கூறுகிறார்.

மரணத்திற்கு காரணம்
இதனால் ஹேமந்த் தன் மீதான பிடி வலுக்கும் நிலையில் அவரோ மரணத்திற்கான காரணத்தை வேறு ஒரு பக்கம் மடை மாற்றியுள்ளார். அதாவது சித்ராவின் மரணத்திற்கு காரணமானவர்களால் எனது உயிருக்கு ஆபத்து என போலீஸாரிடம் பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

சித்ராவுக்கு செக்ஸ் டார்ச்சர்
இந்த நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது சித்ராவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தவர்கள் குறித்து அவர் என்னிடம் கூறியுள்ளார். எனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அனைவரின் பெயர்களும் போலீஸுக்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

மாஜி எம்எல்ஏ
இந்த நிலையில் சித்ராவின் மரணத்தில் மாஜி எம்எல்ஏ, மாஜி அமைச்சர்கள், போதை கும்பல் ஆசாமி உள்ளிட்ட 4 பேருக்கு தொடர்பு என பெரியதொரு அணுகுண்டை போட்டிருந்தார். வெளியே ஹேமந்த் இவ்வாறு சொல்லியிருந்தாலும் மாஜி அமைச்சர்களின் பெயர்களை மட்டும் போலீஸிடம் சொல்லிவிட்டதாக புலனாய்வு பத்திரிகை தகவல் தெரிவித்திருந்தது.

டீல் பேசும் மாஜி
அதாவது தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாஜி, வட மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாஜி ஆகியோரின் பெயர்களை ஹேமந்த் போலீஸிடம் கூறியதாகவும் தெரிகிறது. இதனால் தனது பெயரை டேமேஜ் செய்ய வேண்டாம், என்னை விட்டுடுப்பா என மாஜி அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் ஹேமந்த்தை அணுகி டீல் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. முதலில் ஹேமந்த் சொல்வதே பொய் எந்த மாஜிக்கும் தொடர்பில்லை என சித்ராவின் உறவினர்கள் கூறி வருகிறார்கள், இந்த நிலையில் இந்த டீலிங் விவகாரம் உண்மையா இல்லை கட்டுக்கதைகளா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.