சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சித்ரா குளித்தபோது.. ஹேமந்த் ஏன் வெளி வந்தார்.. யார் அந்த "3வது நபர்".. தொடரும் புதிர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: சித்ரா குளிக்கும்போது ஹேமந்த் ஏன் வெளியே சென்றார் என்ற ஒத்த கேள்வியே இன்னமும் எழுந்து வருகிறது.. சித்ரா மரணம் எப்படித்தான் நடந்தது என்பது குறித்து இதுவரை உண்மையான தகவல்கள் வெளிவராத பட்சத்தில் மறுபடியும் யூகங்களும், சந்தேகங்களும் இணையத்தை வட்டமடித்து கொண்டே இருக்கின்றன.

சித்ரா இறந்து 20 நாட்கள் ஆக போகிறது.. அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார்? என்ற காரணம் தெரியவில்லை.. போலீசார் ஒரு பக்கம் விசாரிக்கிறார்கள்..

ஆர்டிஓ விசாரணை மறுபக்கம் நடந்து அந்த அறிக்கையும் தாக்கல் செய்ய போகிறார்கள். வரதட்சணை கொடுமையால் இறக்கவில்லை என்ற ஒரு தகவல் மட்டும் ஊர்ஜிதமாகி உள்ள நிலையில், பல மர்மங்கள் அப்படியே உலாவி கொண்டிருக்கின்றன. அதை வைத்து கீழ்க்கண்ட சில சந்தேகங்களும் வெளிவந்தபடியே உள்ளன.

யார்னு தெரியுதா பாருங்க.. கும்முன்னு இருக்கும் சித்ரா.. பக்கத்தில் ஜம்முன்னு ஒரு குட்டி.. செம வைரல்யார்னு தெரியுதா பாருங்க.. கும்முன்னு இருக்கும் சித்ரா.. பக்கத்தில் ஜம்முன்னு ஒரு குட்டி.. செம வைரல்

 என்ன நடந்தது?

என்ன நடந்தது?

சித்ரா ராத்திரி 2.45 மணிக்கு தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. அதன்பிறகு 45 நிமிடம் கழித்துதான் போலீஸார் வந்துள்ளனர்.. இந்த இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அதேபோல, சித்ரா ஷூட்டிங் முடித்துவிட்டு எத்தனை மணிக்கு வந்தார் என்ற பதிவு இல்லை, சித்ரா குளிப்பதாக சொல்லி ஹேமந்த் எத்தனை மணிக்கு வெளியே சென்றார் என்ற பதிவும் இல்லை.. சித்ரா தூக்கில் தொங்கியநிலையில், அவரை எதற்காக ஹோட்டல் மேனேஜர் கணேஷூடன் சேர்ந்து கீழே இறக்கி கிடத்த வேண்டும்?

 என்ன நடந்தது?

என்ன நடந்தது?

சித்ரா ராத்திரி 2.45 மணிக்கு தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. அதன்பிறகு 45 நிமிடம் கழித்துதான் போலீஸார் வந்துள்ளனர்.. இந்த இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அதேபோல, சித்ரா ஷூட்டிங் முடித்துவிட்டு எத்தனை மணிக்கு வந்தார் என்ற பதிவு இல்லை, சித்ரா குளிப்பதாக சொல்லி ஹேமந்த் எத்தனை மணிக்கு வெளியே சென்றார் என்ற பதிவும் இல்லை.. சித்ரா தூக்கில் தொங்கியநிலையில், அவரை எதற்காக ஹோட்டல் மேனேஜர் கணேஷூடன் சேர்ந்து கீழே இறக்கி கிடத்த வேண்டும்?

 சந்தேகம்

சந்தேகம்

ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்தால், போலீசார் வந்து தடயங்களை சேகரிக்கும்வரை அதை யாரும் தொடக்கூடாது, என்று விதி இருக்கும்போது, எதற்காக சித்ரா சடலம் கீழே இறக்கப்பட்டது? இது சட்டவிரோதம்தானே? என்பன போன்ற பல சந்தேகங்கள் உலாவி வருகின்றன.

ஹேமந்த்

ஹேமந்த்

அதுமட்டுமல்ல, குளிப்பதாக சொன்னதால் வெளியே சென்றதாக ஹேமந்த் சொல்கிறார், பிறகு ஆவணங்களை எடுத்து வருவதற்காக வெளியே சென்றதாக ஹேமந்த் முரண்பட்ட தகவல்களை சொன்னாலும்கூட, மொத்தத்தில் அவர் ஏன் அந்த நேரத்தில் வெளியே செல்ல வேண்டும்? ஒருவேளை அவர் வெளியே சென்றபோது வேறு யாராவது உள்ளே வந்தார்களா? சித்ராவை கொன்று தூக்கில் விட்டு சென்றார்களா?

 3வது நபரா?

3வது நபரா?

அப்படி வந்தவர்கள், தடயங்களை மாற்றியிருக்கலாம், அல்லது தடயங்களை அழித்திருக்கலாம் போன்ற கேள்விகளையும் சோஷியல் மீடியாவில் எழுப்பி வருகிறார்கள்.. மொத்தத்தில் சித்ரா மரணத்தில் 3வது நபர் வேறு யாராவது சம்பந்தப்பட்டிருக்கலாமோ என்பதுதான் இப்போதைக்கு இதில் எழுந்து வரும் சந்தேகம்..

 போலீசார்

போலீசார்

யாரையோ காப்பாற்றுவதற்காக தன் மகனை போலீசார் கைது செய்துவிட்டனர் என்று ஹேமந்த் அப்பா சொல்லி குற்றச்சாட்டையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.. ஆக மொத்தம் எண்ணற்ற கேள்விகளும், சந்தேகங்களும் நிறைந்த இந்த மரணத்தில் போலீசார் மட்டுமே அனைத்து உண்மைகளையும் வெளிக் கொணருவார்கள் என்று நம்பப்படுகிறது.

English summary
VJ Chitra, Is there a third person involved in the Chitras case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X