சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!

Google Oneindia Tamil News

சென்னை: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலையாவது உறுதியாகியுள்ளது.

Recommended Video

    ஜன. 27.. விடுதலையாகிறார் சசிகலா ! பரபரப்பில் அரசியல் களம்

    இதுவரை சசிகலா இப்போது வருகிறார், அப்போது வருகிறார் என ஆருடங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது அவர் விடுதலையாகும் தேதியும், நேரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Vk Sasikala is released on January 27

    இது தொடர்பான கடிதம் சிறை நிர்வாகத்திடம் இருந்து முறைப்படி சசிகலாவின் வழக்கறிஞரான ராஜா செந்தூர்பாண்டியனுக்கு கிடைத்திருக்கிறது. அதன்படி ஜனவரி 27-ம் தேதி புதன்கிழமை காலை சசிகலா விடுதலையாக உள்ளார்.

    இதற்கு முன்னர் சசிகலா இரவில் விடுதலை செய்யப்படுவார் என தகவல் பரவிய நிலையில் இப்போது அவர் காலை நேரத்தில் விடுதலையாக இருப்பது தெரியவந்துள்ளது. சிறையிலிருந்து விடுதலையாகிய பிறகு ஒசூரில் அமமுக தொண்டர்கள் அளிக்கும் வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் சசிகலா சென்னை திரும்பும்படி பயணத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    பரபரப்பான அரசியல் சூழலில்... ஜனவரி 22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!பரபரப்பான அரசியல் சூழலில்... ஜனவரி 22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!

    இடையே பல இடங்களில் வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னைக்குள் நுழைந்ததும் சசிகலா நேராக செல்லவிருப்பது மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் என்பது குறிப்பிடத்தக்கது. சசிகலா விடுதலை செய்யப்படும் ஜனவரி 27-ம் தேதி காலை தான் ஜெயலலிதா நினைவிடமும் திறக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஓரிரு நாட்கள் ஓய்வில் இருந்துவிட்டு பார்வையாளர்களை அடுத்ததாக சசிகலா சந்திப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுகவின் உட்கட்சி விவகாரம் மீண்டும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.

    English summary
    Vk Sasikala is released on January 27
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X