சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீடு தேடி வரும் வாக்காளர் அடையாள அட்டை.. தமிழக தேர்தல் ஆணையம் அசத்தல் ஏற்பாடு

Google Oneindia Tamil News

சென்னை: வாக்காளர் அடையாள அட்டைகளை, வீடுகளுக்கு அனுப்பும் திட்டத்துக்காக அஞ்சல் துறையிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    வீடுகளுக்கு வாக்காளர் அட்டை அனுப்பும் திட்டம்: அஞ்சல் துறையுடன் ஒப்பந்தம்!

    வீடு தேடி வாக்காளர் அட்டைகள் அனுப்பும் திட்டத்தை சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் அடையாள அட்டைகளை வீடுகளுக்கு அனுப்பும் திட்டத்தில், தபால் துறையிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும், இதற்காக 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

    Voter identification card will send to voters house, says Tamilnadu Election Commission

    பான் கார்டு எப்படி வீடு தேடி வருமோ அதுபோல ஓட்டர் கார்டும் வீடு தேடி வரும் என்றார். ஒருவேளை ஓட்டர் அடையாள அட்டை திரும்பி வந்தால் அட்ரஸ் மாறிவிட்டதா என்பது போன்ற சோதனைகள் செய்யப்படும் என்றார் தலைமை தேர்தல் அதிகாரி.

    தமிழகத்தில், இதுவரை 21 லட்சத்து 39 ஆயிரத்து 395 பேர் முதல் முறை வாக்காளர்களாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர்களுக்கும் அவர்கள் விண்ணப்பித்தால், அதற்குரிய கட்டணம் வசூலிக்கப்பட்டு, வாக்காளர் அடையாள அட்டை வீடுகளுக்கே அனுப்பப்படும். இவ்வாறு சத்ய பிரதா சாஹு தெரிவித்தார்.

    English summary
    Voter ID card will be send to the voters home directly, says Tamil Nadu chief election officer Satya Pradha Sahu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X