சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா... ஊருக்கே வர்றாங்க.. உடனே சேர்க்க இதை செய்யுங்க!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை 23ம் தேதியான நாளை வெளியிட உள்ளது.

எனவே பெயரை சேர்க்க. நீக்க மற்றும் மாற்றம் செய்வதற்கு வசதியாக வரும் ஜனவரி, 4, 5, 11 மற்றும் 12ம் தேதிகளில், தமிழகம் முழுவதும், அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் அடங்கிய பட்டியலுடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அனுப்பி வைத்தது.

6 கோடியை தாண்டியது

6 கோடியை தாண்டியது

அதன்படி தமிழகத்தில் தற்போது 6,00,01,329 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2,96,46,297 பேரும் , பெண் வாக்காளர்கள் 3,03,49,118 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 5,924 பேரும் உள்ளனர்.

வாக்காளர் எண்ணிக்கை

வாக்காளர் எண்ணிக்கை

தமிழகத்தில் கடைசியாக கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி லோக்சபா தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது 5,98,69,758 வாக்காளர்கள் இருந்தனர். இப்போது 6 கோடியை தாண்டி உள்ளது.இந்நிலையில் நாளை வரைவு வாக்காளர்பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிடுகிறார்கள்.

ஜனவரியில்

ஜனவரியில்

இந்நிலையல் 18 வயது நிறைவடைந்தத்வர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்காதவர்களுக்காக தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்வாடி மையங்களில் 4.1.2020(சனி), 5.1.2020(ஞாயிறு), 11.1.2020 ( சனி), 12.11.2020 (ஞாயிறு) ஆகிய நான்கு நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இறுதிபட்டியல்

இறுதிபட்டியல்

அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவர்கள், திருத்தம் செய்ய விரும்புவர்கள் விண்ணப்பம் வழங்கி உடனே சேர்த்துக்கொள்ளலாம். இந்த சிறப்பு முகாமில் விண்ணப்பம் அளித்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது. வருகிற பிப்ரவரி 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலில் வெளியிடப்பட உள்ளது.

English summary
how to join voter list in tamilnadu, to apply voter list camp coing january
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X