சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து பூத்சிலிப் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம்.. தமிழக தேர்தல் அதிகாரி

Google Oneindia Tamil News

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து பூத் சிலிப் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம் என தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளுக்கும் 18 சட்டசபை இடைத்தேர்தலுக்கும் வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது. இதற்காக காலை முதலே ஆங்காங்கே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களிக்க வந்துள்ளனர்.

இந்த நிலையில் பல்வேறு தொகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளன. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் மக்கள் தவித்தனர்.

பூத் சிலிப் வழங்குவதில் மெத்தனம்.. ஒன்றும் புரியாமல் தவிக்கும் வாக்காளர்கள்.. புதிய பிரச்சனை! பூத் சிலிப் வழங்குவதில் மெத்தனம்.. ஒன்றும் புரியாமல் தவிக்கும் வாக்காளர்கள்.. புதிய பிரச்சனை!

அமைதியாக நடைபெறுகிறது

அமைதியாக நடைபெறுகிறது

தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறுகையில் தமிழகத்தில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுகிறது.

அறிவிப்பு

அறிவிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து பூத் சிலிப் இல்லாவிட்டாலும் அடையாள அட்டையை காட்டி வாக்களிக்கலாம் என்றார் அவர். திருவான்மியூரில் பூத் சிலிப் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதை அடுத்து தேர்தல் அதிகாரி இத்தகைய அறிவிப்பை வெளியிட்டார்.

திருவான்மியூர்

திருவான்மியூர்

திருவான்மியூர் அட்வென்ட் கிறிஸ்துவ பள்ளியில் 251-ஆவது வாக்குச் சாவடியில் பூத் சிலிப் இல்லாதவர்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என அதிகாரிகள் வலியுறுத்தினர். அப்போது வாக்காளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

எந்த ஆவணம்

எந்த ஆவணம்

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் சில ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம். பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, அரசாங்கத்தில் பணி புரிபவராக இருந்தால் அந்த அடையாள அட்டை, வங்கி அல்லது அஞ்சல் துறையில் வழங்கப்பட்ட பாஸ்புக், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், தொழிலாளர் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு அட்டை, தேர்தல் இயந்திரத்தால் வழங்கப்பட்ட அங்கீகாரம் பெற்ற புகைப்பட வாக்காளர் சீட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.எல்.ஏ., எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.சி.க்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளைப் பயன்படுத்தலாம்.

English summary
TN Chief electoral officer Satyapradha Sahoo says that Voters can vote without booth slip. At the same time their name should be in Voters list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X