சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுதிமுவென புகுந்த கும்பல்.. கையில் அரிவாள்.. குடும்பத்தினர் கண் முன்பாக.. வெட்டி படுகொலை..!

வியாசர்பாடி ரவுடியை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்த்தது

Google Oneindia Tamil News

சென்னை: கையில் அரிவாளுடன் திமுதிமுவென நுழைந்து.. குடும்பத்தினர் கண்முன்னாடியே 22 வயது ரவுடியை மர்ம கும்பல் ஒன்று வெட்டி கொன்றுவிட்டு தப்பி சென்றுள்ளது.. இந்த சம்பவத்தினால் வியாசர்பாடியே வெலவெலத்து போயுள்ளது.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் சம்பத்... இவருடைய மகன் சந்தோஷ்குமார்.. 22 வயதான இவர், இந்த பகுதியில் பெரிய ரவுடி... செம்பியம் ஸ்டேஷனில் சரித்திரபதிவேடு குற்றவாளியாம்.

இன்னும் பல போலீஸ் ஸ்டேஷனில் ஏகப்பட்ட கேஸ்கள் இவர் மீது உள்ளன. இதெல்லாம் போதாது என்று கஞ்சா அடிக்கும் பழக்கமும் உள்ளதாம்.

அரிவாள்

அரிவாள்

இந்நிலையில், நேற்று இரவு 8 மணி இருக்கும்.. சந்தோஷ்குமார் தனது வீட்டின் அருகில் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல், திடீரென அங்கு கையில் அரிவாள், கத்தியுடன் ஆவேசமாக வந்தது.. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்தோஷ்குமார், அங்கிருந்து தப்பி வீட்டுக்குள் ஓடினார்.

சுற்றி வளைப்பு

சுற்றி வளைப்பு

ஆனால் மர்மகும்பல் பின்னாடியே விரட்டி சென்று, அவரை சுற்றி வளைத்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த சந்தோஷ்குமார், ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். குடும்பத்தினர் கண் முன்னாடியே சந்தோஷ்குமாரை அந்த கும்பல் வெட்டி சாய்த்து தப்பியது.

விசாரணை

விசாரணை

சந்தோஷ்குமார் உடலை பார்த்து குடும்பமே கதறியது.. இவர்களின் அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த செம்பியம் போலீசார், சந்தோஷ்குமார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்தும் விசாரித்தனர்.

தனிப்படை

தனிப்படை

அதில் ரவுடிகள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே சந்தோஷ்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்டு இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.. ஆனால் கொலையாளிகள் யார் யார் எனஉறுதியாக தெரியவில்லை.. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

English summary
vyasarpadi rowdy murder by six people due to prejudice near chennai and police investigation is going on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X