சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அறிவித்த ஒரே வாரத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி.. மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட பயிர் கடன் ரத்து அறிவிப்பை தொடர்ந்து ஒரே வாரத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீதை விவசாயிகளிடம் வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாதனை புரிந்துள்ளார்.

பயிர்க்கடன் தள்ளுபடியை ஒரே வாரத்தில் நடைமுறைப்படுத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நன்றிகளை தெரிவித்தனர்.

கொரோனா, நிவர், புரெவி புயல்கள், ஜனவரி மாத மழை போன்ற இயற்கை சீற்றங்களால் பயிர்கள் பெரும் சேதம் அடைந்தன. கடன் பெற்று விவசாயம் மேற்கொண்ட விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளானார்கள்.

முதல்வர் பழனிச்சாமி

முதல்வர் பழனிச்சாமி

அவர்கள் மீண்டும் சாகுபடியை துவக்கிடும் வகையில் இடுபொருள் நிவாரணம் 1,717 கோடி ரூபாயை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களை துவக்கிடும் வகையில் கூட்டுறவு வங்கியில் விசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 12, 110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்யப்படும் என்று சட்ட பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

கடன் தள்ளுபடி

கடன் தள்ளுபடி

இதனால் மாநிலம் முழுவதும் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு அனைத்து விவசாய சங்கங்களும் நன்றி தெரிவித்தனர். தமிழக காவிரி விசாய நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் காவிரி ரங்கநாதன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

விவசாயிகள் நன்றி

விவசாயிகள் நன்றி

இதேபோல், பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு ஆகியோரும் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த 8ம் தேதி பயிர்க்கடன் ரத்து அறிவிப்பு குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தின் போது பத்து நாட்களில் பயிக்கடன் ரத்து ரசீது விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று கூறினார்.

பயிர்க்கடன் ரத்து

பயிர்க்கடன் ரத்து

இந்நிலையில், பயிர்க்கடன் ரத்து வெளியிடப்பட்டு ஒரே வாரத்தில் அதற்கான ரசீதை விவசாயிகளுக்கு வழங்கி, மாநிலம் முழுவதும் ரசீது வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பயிர்க்கடன் ரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு வாரத்திற்குள் செயல்படுத்தி சாதனை படைத்துள்ளார்.

எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி

எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி

அறிவிப்பு வெளியிட்டு ஒரே வாரத்தில் அதனை செயல்படுத்தி எதிர்கட்சிகளின் வாயை அடைத்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பயிர்க்கடன் அறிவிப்பு வெளியிட்டு ஒரு வாரத்தில் செயல்படுத்தி தங்களது வாழ்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒளியேற்றி வைத்துள்ளதாக விவசாயிகள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

குறையே இல்லை

குறையே இல்லை

எதாவது குறை கண்டு பிடிக்கவேண்டும் என்று தேடிகொண்டிருக்கும் எதிர் காட்சிகளுக்கு முதல்வர் ஒரு சிறு வாய்ப்பு கூட கொடுக்கவில்லை. எதிர் கட்சிகள் கேள்வி எழுப்புவதற்கு முன்பாகவே, அனைத்தயும் செய்து முடித்து விட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

English summary
Farmers are elated over the Waiver of crop loan by Tamil Nadu Govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X