சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடேங்கப்பா.. என்னா ஒரு அலங்காரம்.. வழியெங்கும் வாழைக்குலை.. தோரணம்.. அமித்ஷாவுக்காக!

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித் ஷா 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். அவரை வரவேற்க வாழையும், கரும்பும் பழத்தோரணங்களும் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: குலை தள்ளிய வாழை மரங்கள்... செங்கரும்பு தோரணங்கள்.. பழங்களால் ஆன அலங்கார வளைவுகளை வைத்து அமித்ஷாவை வரவேற்க தயாராகி வருகின்றனர் தமிழக பாஜகவினர். தட புடல் வரவேற்பை பார்த்து உள்துறை அமைச்சர் அமித்ஷா அசந்து போக வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Recommended Video

    அடேங்கப்பா.. என்னா ஒரு அலங்காரம்.. வழியெங்கும் வாழைக்குலை.. தோரணம்.. அமித்ஷாவுக்காக!

    சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது தமிழ்நாடு. கூட்டணியா? தனித்து போட்டியா என்று என்று ஆளும் கட்சி இன்னமும் முடிவு செய்யவில்லை. பாஜகவுடன் நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட்ட நிலையில் அதே கூட்டணி நீடிப்பதாகவே அமைச்சர்களும், பாஜகவினரும் கூறி வருகின்றனர். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் தற்போதைய முதல்வரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி.

    பாஜக இந்த முறை எப்படியாவது ஒரு சில இடங்களிலாவது வென்று சட்டசபைக்குள் உறுப்பினர்களை அனுப்பி விட வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் அமிஷ்சாவின் பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நயன்தாரா போலீசுக்கு போக போகிறார்.. நயன்தாரா போலீசுக்கு போக போகிறார்.. "அவர்" உள்ளே போகப் போறார்.. குண்டை போட்ட ராஜேந்திர பாலாஜி!

    அமித்ஷாவின் வருகை

    அமித்ஷாவின் வருகை

    உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு தமிழக அரசு சார்பிலும் பாஜக சார்பிலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி சாலையிலிருந்து சென்னை பழைய விமானநிலையத்திற்கு செல்லும் வழி மற்றும் ஜிஎஸ்டி சாலையோரம் பிரம்மாண்டமான அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

    பழ அலங்கார வளைவுகள்

    பழ அலங்கார வளைவுகள்

    குலை தள்ளிய வாழை மரங்கள், செங்கரும்புகள் கரும்பு,தென்னை ஓலைகளால் கட்டப்பட்ட தோரணங்கள்,பழங்கள் போன்றவைகளால் அலங்கரிக்கப்படுகிறது. இந்த அலங்கார ஏற்பாடுகளை பாஜகவினா் செய்துள்ளனர்.

    அரசு விழாவில் பங்கேற்பு

    அரசு விழாவில் பங்கேற்பு

    விமான நிலையத்தில் இருந்து ராஜா அண்ணாமலைபுரம் லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலுக்குச் சென்று ஓய்வெடுக்கும் அமித்ஷா, இன்றைய தினம் மாலையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு லீலா பேலஸ் ஓட்டலுக்கு திரும்பும் அமித் ஷா, இரவு பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களுடன் சட்டசபை தேர்தல் பணிகள், கூட்டணி, அதிமுக-பாஜக உறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

    சட்டசபை தேர்தல் பற்றி பேச்சு

    சட்டசபை தேர்தல் பற்றி பேச்சு

    அதனைத் தொடர்ந்து பாஜக மாநில மையக் குழு கூட்டத்திலும் பங்கேற்கும் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி குறித்தும் விவாதிக்கிறார். பாஜக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அமித் ஷாவை சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்று இரவு சென்னையில் தங்கும் அமித் ஷா நாளை டெல்லி புறப்பட்டுச் செல்ல இருப்பதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    The Tamil Nadu BJP is preparing to welcome Amit Shah with decorative banana arches, red cane poles and decorative arches made of fruits. They have made these arrangements so that Home Minister Amit Shah can go to see the track reception.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X