திருச்சியில் அண்ணாமலை பொதுக்கூட்டத்திற்கு கூட்டம் வரவில்லையா? நடந்தது இதுதான்
சென்னை: திருச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் பாஜக தலைவர் அண்ணாமலை மேடையில் பேசும் போது அங்கே கூட்டம் எக்கச்சக்கமாக கூடி இருந்தது. பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்துவிட்டதாக தேசிய ஊடகங்கள் சில கருத்து கணிப்புகள் கூறும் நிலையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி சிறுகனூரில் நடந்த பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி மாநாட்டில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூட்டணி மரியாதைக்காக இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். சுமார் ஒரு 30 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் முன்னிலையில் அண்ணாமலை இந்த கூட்டம் நடந்தது.

நிகழ்வின் தொடக்கத்தில் கொஞ்சம் குறைவாக கூட்டம் இருந்தது. ஆனால் 1 மணி நேரத்திற்கு பின் அண்ணாமலை வந்ததும் கூட்டம் அள்ள தொடங்கியது. அண்ணாமலை பேசும் போதெல்லாம் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
அவர்களுக்கு முன் நின்று அண்ணாமலை பேசினார். திருச்சி சிறுகனூரில் நடந்த பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி சார்பாக மாநாடு நடத்தப்பட்டது. இது பாஜக மாநாடு இல்லை. ஆனாலும் அண்ணாமலை பேச்சை கேட்க கூட கூட்டம் அதிக அளவில் கூடியது.
அண்ணாமலை: தமிழ்நாட்டில் பாஜக இரண்டாவது பெரிய கட்சி என்று சில கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் திருச்சியில் நடந்த கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை காண பலர் கூடி இருந்தனர்.
லோக்சபா தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. இந்த சர்வேக்கள் பல்வேறு அதிர்ச்சி தரும் சுவாரசியமான விஷயங்களை வெளியிட்டு வருகின்றன. டைம்ஸ் நவ் - மேட்ரைஸ் என்சி இது தொடர்பாக கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்றும் கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. . தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ:
- பாஜக: 1
- திமுகவின் இந்தியா கூட்டணி - 36
- அதிமுக: 2
- மற்றவை: 0
தமிழ்நாட்டில் தோல்வி: அதே சமயம் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் படி பாஜக: 1 இடத்தில் மட்டுமே வெல்லும். திமுகவின் இந்தியா கூட்டணி - 36 இடங்களில் வெல்லும். 39 இடங்களில் இருந்து 3 இடங்களை திமுக இழக்கும் என்றாலும், பெரும்பான்மை இடங்களில் திமுகவே வெல்லும். அதிமுக: 2 இடங்களில் வெல்லும். கடந்த முறை ஒரு தொகுதியில் வென்ற அதிமுக இந்த முறை 2 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
பாஜக முந்தும்: திமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் 59.7 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் பாஜக 20.6 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிமுக 16 சதவிகித கருத்து கணிப்புகளை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அதாவது இந்த முறை பாஜக அதிமுகவை விட அதிக வாக்குகள் பெறும். முதல்முறையாக பாஜகவின் வாக்கு வங்கி அதிமுகவை முந்தும். தமிழ்நாட்டில் பாஜக இரண்டாம் இடத்தை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இப்படி பல்வேறு கணிப்புகள் பாஜக அதிமுகவை விட அதிக வாக்குகள் பெறும் என்று கணித்து உள்ளன.
பல கணிப்புகள்: தமிழ்நாட்டை சேர்ந்த சில செய்தி நிறுவனங்கள் கூட பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக மாறும், அல்லது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு அடுத்தபடியாக வாக்கு சதவிகித அடிப்படையில் மூன்றாவது பெரிய கட்சியாக மாறும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆனால் களநிலவரம் பாஜகவிற்கு சாதகமாக இருக்கிறதா? உண்மையில் கருத்து கணிப்புகள் சொல்வது போல பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக வளர்ந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications